( எம்.நியூட்டன்)
தமிழ் மக்களாயினும் சரி சிங்கள மக்களாயினும் சரி ஆட்சியாளர்கள் அனுமதி கொடுத்துத்தான் தமக்கான அபிலாசைகளை வென்றெடுக்கும் நோக்குடன் இந்த நாட்டில் போராட்டங்களை முன்னெடுத்திருந்திருக்கவில்லை. மாறாக அந்தந்தக் காலச் சூழல்களில் அந்தந்த மக்களிடம் அது நிர்ப்பந்திக்கப்பட்டதனால் தான் ஆயுதப் போராட்டம் இந்த நாட்டில் முன்னெடுக்கப்பட்டது என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
அண்மையில் கொழும்பில் நடந்து முடிந்த தேசிய வீரர்கள் தின விழாவில் அனுர ஜனாதிபதி, நிகழ்காலத்திலோ அல்லது எதிர்காலத்திலோ மீண்டும் இந்த நாட்டில் யுத்தம் ஒன்று நடைபெறுவதற்கு தான் இடமளிக்க மாட்டேன் என்று ஒரு கருத்தை பகிர்ந்திருந்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
நானும் இந்த நாட்டில் நடைபெற்ற ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப போராளிகளில் ஒருவன் என்றதன் அடிப்படையில் இந்த கருத்தை கூறுகின்றேன்.
அத்துடன் அனுர ஜனாதிபதி சார்ந்த இயக்கம் இந்த நாட்டில் ஆயதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது. அதேபோன்றுதான் நாங்களும்; எமது மக்களின் அபிலாசைகளுக்காக ஆயுதவழியிலான போராட்டத்தையும் முன்னெடுத்திருந்தோம்.
குறிப்பாக அனுர ஜனாதிபதி சார்ந்த இயக்கமும் சரி எமக்கும் சரி ஆட்சியாளர்கள் அனுமதி கொடுத்துத்தான் எமது நாட்டில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை. மாறாக அந்தக் காலச் சூழலில் ஆத தமிழ் இளைஞர்களாகிய எம்மீது நிர்ப்பந்திக்கப்பட்டதனால்தான் அவர்களது பக்கமாக இருந்தாலும் சரி எமது பக்கமாக இருந்தாலும் சரி ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியிருந்தது.
இதேவேளை தமிழ் மக்களைப் பொறுத்தளவில் தாங்கள் தமிழர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக இலங்கையர் என்ற அடையாளர்தைக் கைவிடவோ அன்றி இலங்கையர் என்றதற்காக தமிழர்கள் என்ற அடையாளர்தைக் கைவிடவோ தயாராக இருக்கவில்லை. தமிழ்களாகவும் சமநேரத்தில் இலங்கயைர்களாகவும் இருக்கவோண்டும் என்பதுதான் அவர்களது அபிலாசையாக இருக்கின்றது.
அந்தவகையில் இன்று முன்னெடுக்கப்பட்ட வன்முறைள் அனைத்தும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதனடிப்படையில்; இன்னொருமுறை தமிழ்ரகள் தரப்பில் அவ்வாறானதொரு ஆயுதப் போராட்டத்தை சிந்திக்க மாட்டார்கள் என எனது அனுபவத்தில் இருந்து கூறுகின்றேன்.
அதேநேரத்தில் அனுர ஜனாதிபதிக்கு இருக்கக் கூடிய அனுபவங்களைக் கொண்டு அவர் இனிமேல் அவ்வாறான யுத்தம் ஒன்று நடைபெற இடமளிக்கமாட்டேன் என்று கூறியிருக்கின்றார். அது நல்ல விடயம். அதேநேரம் இவ்வாறான சூழலில் தமிழ் மக்களுடைய அபிலாசைகளை தீர்க்கக் கூடிய வகையில் அவர்களது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க அவர் முயற்சிக்கவும் வேண்டும்.
அந்த வகையில் நாம் நீண்டகாலமாக சொல்லிவரும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தினூடாக ஏற்படுத்தப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாபக நடைமுறைப்படுத்துவதில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். அதை முன்னெடுக்க முதல்கட்டமாக நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பங்கு அதிகாரத்தை கொண்டுள்ள இந்த அனுர அரசு அதற்கான ஒரு சட்டத்திருத்தத்தை கொண்டுவந்து விரைவாக மாகாணசபைத் தேர்தலை நடத்தி எமது மக்களின் அபிலாசைகளையாவது தீர்த்துவைப்பதற்கான முயற்சியை முன்னெடுக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாக இருக்கின்றது என்றார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM