தோட்டப் பிரதேசங்களில் பொதுமக்கள் பாதுகாப்பு குழு அமைக்கப்பட வேண்டும் - பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

22 May, 2026 | 03:54 PM
image

தோட்டப் பிரதேசங்களில் பொதுமக்கள் பாதுகாப்பு குழு அமைக்கப்படல் வேண்டும் என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் வலியுறுத்தியுள்ளார். 

வியாழக்கிழமை (21) பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கலந்துரையாடலொன்றில் பங்கெடுத்தபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஏற்பாட்டில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால,  பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, பிரதி தொழில் அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, ஆளும் மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், பொலிஸ் மா அதிபர், பிரியந்த வீரசூரிய மேல் மற்றும் சபரகமுவ, ஊவா, மத்திய,  தென் மாகாணங்களுக்குரிய பிரதி பொலிஸ் மா அதிபர்கள், பெருந்தோட்ட கம்பெனிகளின் சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

பெருந்தோட்டத் துறையில் நிலவும் பாதுகாப்பு சவால்கள், அடக்குமுறைகள், தொழிலாளர் நலன் மற்றும் சட்ட ரீதியான அணுகுமுறைகள் தொடர்பான விடயங்கள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், சில முக்கிய முடிவுகளும் எட்டப்பட்டன.

இதன்படி, தோட்டப் பிரதேசங்களில் பொதுமக்கள் பாதுகாப்புக் குழு அமைக்கப்படவுள்ளதோடு மலையக மக்களின் பாதுகாப்புக்கான விசேட குழு ஒன்றும் விரைவில் நிறுவப்படவுள்ளது.

பெருந்தோட்ட நிறுவனங்கள் சட்டத்தை தமது கையில் எடுத்துக்கொண்டு தோட்ட மக்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டாம் என பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தோட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தினார்.

அத்துடன், பெருந்தோட்ட மக்களின் காணி பிரச்சினைக்குத் தீர்வு காண விசேட குழு ஒன்று நிறுவப்பட்டு, ஜனாதிபதியுடன் கலந்தாலோசிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன்...

2026-06-17 12:13:47
news-image

யாழ் – கண்டி பிரதான வீதியில்...

2026-06-17 09:57:36
news-image

திருகோணமலையில் பத்மநாபாவின் 36வது ஆண்டு தியாகிகள்...

2026-06-17 10:01:11
news-image

நாட்டின் பல பகுதிகளில் இடைக்கிடையே மழை;...

2026-06-17 09:26:59
news-image

வீட்டுத் திட்ட பயனாளிகளுக்கான காசோலை வழங்கும்...

2026-06-17 05:47:24
news-image

குச்சவெளி பள்ளவக் குள பகுதியில் குடிநீர்...

2026-06-17 05:42:05
news-image

யாழ். மாவட்ட வீட்டுத்திட்டம் தொடர்பிலான முன்னேற்ற...

2026-06-17 05:33:32
news-image

தொல்பொருள் பெறுமதிமிக்க கல் விற்பனை செய்ய...

2026-06-17 05:29:23
news-image

பொருளாதார மீட்சிக்கு ஏற்றுமதியே நீண்டகால தீர்வு...

2026-06-17 05:27:43
news-image

2030 ஆம் ஆண்டுக்குள் 36 பில்லியன்...

2026-06-17 05:24:33
news-image

சுரேஷ் சலே விசாரணை அரசியல் நோக்கமுடையதா?...

2026-06-17 05:21:20
news-image

இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான...

2026-06-17 05:11:41