(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ சென்ற பாதையில் தான் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பயணிக்கிறார். நேரடி வெளிநாட்டு முதலீடுகள் கிடைக்காத காரணத்தால் டொலர் கையிறுப்பு குறைவடைந்துள்ளது.இதன் தாக்கம் எதிர்வரும் காலங்களில் இதன் தாக்கம் பாரதூரமானதாக அமையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) நடைபெற்ற அமர்வின்போது நடைபெற்ற இறக்குமதி மற்றும்
ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச் ) சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
டொலர் பெறுமதி நாளுக்கு நாள் உயர்வடைந்து செல்கிறது. ஆனால் இதனால் பொருளாதாரத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது. கோட்டாவின் அரசாங்கமும் அவ்வாறு தான் குறிப்பிட்டது.இறுதியில் பின்கதவால் ஓட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. என்பதை இந்த அரசாங்கம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ சென்ற பாதையில் தான் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பயணிக்கிறார். நேரடி வெளிநாட்டு முதலீடுகள் கிடைக்காத காரணத்தால் டொலர் கையிறுப்பு குறைவடைந்துள்ளது. நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்டிக் கொள்வதற்கு அரசாங்கம் எவ்வித புதிய திட்டங்களையும் அமுல்படுத்தவில்லை.
சர்வதேச நாணய நிதியத்தின் 700 மில்லியன் டொலர் நிதி கிடைத்தால் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணலாம் என்ற நிலையில் இருந்துக் நிதி பிரதி அமைச்சர் பேசுகிறார்.700 மில்லியன் டொலர் ஒன்றரை மாதத்துக்கு எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு தான் போதுமானதாக இருக்கும்.அரசாங்கத்திடம் எவ்விதமான நீண்டகாலத் திட்டமும் கிடையாது.
17 கப்பல்கள் ஊடாக தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது. அதன் சுமையும் இன்று நாட்டு மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.அரசாங்கத்தின் முறையற்ற நிர்வாகத்தினால் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM