(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
நாடளாவிய ரீதியில் நீண்ட காலமாக பதில் கடமை அடிப்படையில் பணி புரியும் ஆசிரிய ஆலோசகர்களை விரைவில் நிரந்தரமாக்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என பிரதி கல்வி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்பி.எம்.எஸ். உதுமாலெப்பை எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
உதுமாலெப்பை எம்பி தமது கேள்வியின் போது, நீண்ட காலமாக பதில் கடமை அடிப்படையில் கடமை யாற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் வளவாளர்களை நிரந்தரமாக்குவதற்கு கல்வியமைச்சு மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்ன? .
அத்துடன் நான்காயிரத்துக்கும் அதிகமானோர் அவ்வாறான நிலையில் உள்ளனர் அவர்களை நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்றார்.
அதற்கு பிரதி அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில், தற்போது அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அது தொடர்பில் முகாமைத்துவ திணைக்களத்திற்கு அறிவித்துள்ள நிலையில் ஏற்கனவே ஒரு தரப்பினர் நியமனம் பெற்றுள்ள நிலையில் அப்போது நியமனம் பெறாதவர்கள் மீண்டும் விண்ணப்பங்கள் கோரப்படும் போது அவர்களுக்கும் விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படும் .
அதேநேரம் ஆசிரிய ஆலோசகர் பதவிகளை உருவாக்கும் சமகாலத்தில் மாகாண கல்விச் செயலாளர்கள் அல்லது மாகாண கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக நியமனம் வழங்கி நீண்ட காலமாக ஆசிரியர் ஆலோசர்களாக பணியாற்றி வரும் அதிகாரிகளுக்கு அவர்களின் விருப்பப்படி 2022- 1 -2ஆம் திகதி ஆசிரியர் ஆலோசர்களாவ தற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
மேலும் ஆசிரிய ஆலோசர்களாவதற்கு விருப்பம் தெரிவித்து விண்ணப்பிக்க தகைமை உள்ளோருக்கு 2025 2-15ஆம் திகதி வரை கடிதத்தை பொறுப்பேற்பதற்கான கால எல்லை வழங்கப்பட்டிருந்தது. அக்காலத்திலும் ஆசிரிய ஆலோசகர்களாக உள்வாங்கும் செயற்பாடுகளில் இணைக்கப்படாதவர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கு மாகாண அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
எனினும் புதிதாக ஆசிரிய ஆலோசர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்களை கோரும் அனுமதியை பெற்றுக் கொள்வதற்காக முகாமைத்துவ திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
அந்த அனுமதி கிடைத்தவுடன் ஆசிரியர் சேவையில் உள்ளோர் ஆசிரிய ஆலோசகர் சேவைக்கு நியமிக்கப்படுவர். அதற்கான விண்ணப்பங்களைக் கோரும் வர்த்தமானியை வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM