சர்வதேச வல்லரசுகள் மௌனம் காக்கும் என்று எவரேனும் பகுத்தறிவுக்கு உட்பட்டு நம்ப முடியுமா? - சஞ்ஜீவ எதிரிமான்ன

21 May, 2026 | 04:18 PM
image

(க.சிவலிங்கமூர்த்தி) 

உள்நாட்டில் வெறும் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக பொதுமக்கள் மீது குண்டுத்தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின்போது, சர்வதேச வல்லரசுகள் மௌனம் காக்கும் என்று எவரேனும் பகுத்தறிவுக்கு உட்பட்டு நம்ப முடியுமா என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஞ்ஜீவ எதிரிமான்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி காரியாலயத்தில் இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இந்த கொடூரத் தாக்குதலில் 11 வயது சிறுவன் உள்ளடங்கலாக ஐந்து அமெரிக்கப் பிரஜைகள் உயிரிழந்திருந்தனர். இவ்வாறானதொரு அனர்த்தத்தின்போது அமெரிக்கா போன்றதொரு வல்லரசு தேசம் மௌனியாக இருந்திருக்கும் என்று கருதுவது முற்றிலும் யதார்த்தத்துக்குப் புறம்பானதாகும். 

இவ்வாறான தர்க்கமற்ற, வெறும் மக்கள் விருப்புவாத அரசியல் கருத்துக்கள் மூலம் மீண்டும் மீண்டும் நாட்டின் பொதுஜன அபிப்பிராயத்தை திசைதிருப்புவதற்கும் கொள்ளையடிப்பதற்கும் இடமளிக்க முடியாது. எனவே, எமது பாணந்துறை மாபெரும் மக்கள் பேரணியைப் போன்று, மேலும் 20 அல்லது 30 மாபெரும் பேரணிகளை நாடு தழுவிய ரீதியில் நடாத்தி, தேசிய அரசியலில் ஒரு தீர்க்கமான திருப்புமுனையை ஏற்படுத்துவதற்கான உகந்த காலம் தற்போது கனிந்துள்ளது.

அரசியல் தஞ்சம் கோரும் சுயநல நோக்கில் ஒரு தனிநபரால் முன்வைக்கப்படும், சட்ட ரீதியான சான்றாதாரப் பெறுமதியற்ற வெற்றுப் பிரகடனங்களை நீதிமன்றத்தின் முன்னிலையில் இந்த அளவுக்கு உன்னதப்படுத்துவது நியாயமற்றதாகும். 

அத்துடன், முறையான புலனாய்வுத் தகவல்கள் முன்கூட்டியே கிடைத்திருந்தும், இந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தடுத்து நிறுத்தத் தவறியமை தொடர்பில் குற்றவியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த ஷானி அபேசேகர, தற்போதைய புலனாய்வு விசாரணைகளில் இவ்வாறானதொரு பாத்திரத்தை வகிப்பது எந்த வகையில் அறநெறிக்கும் நீதிக்கும் பொருத்தமானதாகும்?

இத்தாக்குதல் குறித்து அமெரிக்காவின் எஃப்.பி.ஐ. நிறுவனம் மேற்கொண்ட புலனாய்வு விசாரணைகளுக்கு ராஜ் பட்டேல் என்பவரே தலைமை தாங்கியிருந்தார். 

அமெரிக்காவுக்கு வெளியே சர்வதேச மட்டத்தில் எஃப்.பி.ஐ. நிறுவனம் மேற்கொண்ட மிகச் சிறப்பான புலனாய்வு விசாரணை இதுவென அவரே ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டிருந்தார். எஃப்.பி.ஐ. நிறுவனம் மட்டுமன்றி, அமெரிக்க ஆயுதப் படைகளும், அதன் ஏனைய சிவில் திணைக்களங்களும், சர்வதேச பொலிஸான இன்டர்போல் மற்றும் அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸ் ஆகியனவும் இதில் நேரடியாகப் பங்கெடுத்திருந்தன. இக்கோர சம்பவத்தில் 45 வெளிநாட்டுப் பிரஜைகள் உயிரிழந்திருந்த நிலையில், அவர்கள் சார்ந்த நாடுகள் அனைத்தும் இந்த சர்வதேச விசாரணைகளில் நேரடியாகப் பங்கெடுத்திருந்தன.

எனவே, பொதுமக்கள் மேலும் இவ்வாறான போலியான விவாதங்களினாலும் அரசியல் தந்திரோபாயங்களினாலும் ஏமாற்றமடையக் கூடாது. இந்த நாட்டின் உன்னதமான நீதித்துறை கட்டமைப்புக்குள் இந்த விசாரணை செயல்முறைகள் மிகவும் சுயாதீனமாகவும் நம்பகத்தன்மையுடனும் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

எவரேனும் இத்தகைய அர்த்தமற்ற கருத்துக்கள் மூலம் உன்னத நீதியையும் கொள்ளையடிக்க முடியும் என்று கற்பனை செய்தால், அது நாட்டின் சட்டத்தின் ஆட்சிக்கும் சட்ட நெறிமுறைகளுக்கும் இழைக்கப்படும் அவமதிப்பாகவே நாம் கருதுகின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாரிய கடத்தல் முறியடிப்பு: சொகுசு மோட்டார்...

2026-06-14 14:54:12
news-image

செம்மணி மனிதப்புதைகுழியை பார்வையிடவுள்ள ஐரோப்பிய ஒன்றியப்...

2026-06-14 14:53:38
news-image

மாகாணசபைத் தேர்தல்; சாணக்கியன் எம்.பியின் தனிநபர்...

2026-06-14 14:48:35
news-image

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு...

2026-06-14 15:02:36
news-image

டெங்கு உட்பட வைரஸ் காய்ச்சல் பரவல்...

2026-06-14 14:31:24
news-image

தேசிய கல்விக் கொள்கையின்றி கல்வி மறுசீரமைப்புகளை...

2026-06-14 13:48:36
news-image

எனது கணவர் செம்மணி படுகொலையை வெளிப்படுத்திய...

2026-06-14 12:49:37
news-image

சிறுபான்மை கட்சிகள் கூட்டிணைந்து ஜனாதிபதி அநுரவை...

2026-06-14 12:48:47
news-image

சலே எட்டு நாட்களாக ஒரு துளி...

2026-06-14 12:48:14
news-image

கண்டி - குருநாகல் வீதியில் விபத்து:...

2026-06-14 12:47:40
news-image

2.5 மில்லியன் டொலர் மோசடி பாராளுமன்றுக்கு...

2026-06-14 13:56:41
news-image

தமிழ்ச்சமூகத்தின் மாபெரும் ஆளுமை கலாநிதி தேவநேசன்...

2026-06-14 12:34:42