அதிகரிக்கும் சைபர் குற்றங்களை தடுக்க சட்டங்களில் திருத்தம்; அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவிப்பு!

21 May, 2026 | 04:09 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

 நாட்டில் அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள் மற்றும் ஏனைய குற்றங்களை தடுக்கும் வகையில் நடைமுறையிலுள்ள சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை  எடுத்து வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21)  வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் தேசிய மக்கள் சக்தி எம்பி ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர்  இவ்வாறு தெரிவித்தார்.

ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி எம்பி தமது கேள்வியின் போது, நிதி மோசடி தொடர்பாக நிபுணத்துவம் பெற்றவர்களைக் கொண்ட சைபர் குற்றச் செயல் தொடர்பான தனியான புலனாய்வுப் பிரிவுகள் நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் நிறுவப்பட்டுள்ளதா என வினவினார்.

அதற்கு தொடர்ந்தும் பதிலளித்த அமைச்சர் ஆனந்த விஜேபால, 

நாட்டில் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அது தொடர்பில் கிடைத்து வரும் முறைப்பாடுகளும் அதிகரித்துள்ளன. அந்த வகையில் சைபர் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு மாகாண ரீதியில் பிரிவு அலுவலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

எதிர்காலத்தில் ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணத்திலும் மேற்படி மாகாண பிரிவு அலுவலகங்களை உருவாக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் இவ்வாறு சைபர் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு அலுவலகங்கள் உருவாக்கப்படுகின்றன.

இலங்கை மத்திய வங்கியின் நிதி கட்டமைப்பின் நிதி மோசடி ஆய்வு பிரிவு தொழில்நுட்ப அமைச்சு உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களும் இணைந்ததாக செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு பேச்சுவார்த்தைகளும் இதுவரை நடைபெற்றுள்ளன.

அந்த வகையில் எதிர்காலத்தில் இடம் பெறக்கூடிய சைபர் குற்றங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என்பதுடன் நாட்டின் பொலிஸ் துறை, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு இணைந்ததான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சைபர் குற்றங்களை இல்லாதொழிக்கும் வகையில் நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கு மேலதிகமாக புதிய சட்டங்களை உருவாக்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சட்டங்களை மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சைபர் குற்றங்கள் மற்றும் ஏனைய குற்றங்களை தடுக்கும் வகையிலான நடைமுறையில் உள்ள சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. அது தொடர்பான நடவடிக்கைகளை தற்போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் நீதிமைச்சும் இணைந்து நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாரிய கடத்தல் முறியடிப்பு: சொகுசு மோட்டார்...

2026-06-14 14:54:12
news-image

செம்மணி மனிதப்புதைகுழியை பார்வையிடவுள்ள ஐரோப்பிய ஒன்றியப்...

2026-06-14 14:53:38
news-image

மாகாணசபைத் தேர்தல்; சாணக்கியன் எம்.பியின் தனிநபர்...

2026-06-14 14:48:35
news-image

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு...

2026-06-14 15:02:36
news-image

டெங்கு உட்பட வைரஸ் காய்ச்சல் பரவல்...

2026-06-14 14:31:24
news-image

தேசிய கல்விக் கொள்கையின்றி கல்வி மறுசீரமைப்புகளை...

2026-06-14 13:48:36
news-image

எனது கணவர் செம்மணி படுகொலையை வெளிப்படுத்திய...

2026-06-14 12:49:37
news-image

சிறுபான்மை கட்சிகள் கூட்டிணைந்து ஜனாதிபதி அநுரவை...

2026-06-14 12:48:47
news-image

சலே எட்டு நாட்களாக ஒரு துளி...

2026-06-14 12:48:14
news-image

கண்டி - குருநாகல் வீதியில் விபத்து:...

2026-06-14 12:47:40
news-image

2.5 மில்லியன் டொலர் மோசடி பாராளுமன்றுக்கு...

2026-06-14 13:56:41
news-image

தமிழ்ச்சமூகத்தின் மாபெரும் ஆளுமை கலாநிதி தேவநேசன்...

2026-06-14 12:34:42