ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் விஜயத்தை சிறப்பாக நடத்த நிந்தவூர் பிரதேச சபை தீர்மானம்

21 May, 2026 | 02:22 PM
image

நாளை வெள்ளிக்கிழமை (22) நிந்தவூர் பிரதேசத்திற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வருகையை எவ்வித குறைகளுமின்றி சிறப்பாக நடத்த நிந்தவூர் பிரதேச சபை தீர்மானம் எடுத்துள்ளது.

நிந்தவூர் பிரதேச சபையின் 5ஆவது சபையின் 8ஆவது அமர்வு இன்று வியாழக்கிழமை (21) காலை 11.00 மணிக்கு சபை மண்டபத்தில் தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது ஜனாதிபதியின் நிந்தவூர் விஜயத்தை மகிழ்வுடனும் சிறப்புடனும் முன்னெடுக்க வேண்டுமென தவிசாளர் முன்வைத்த கருத்தை சபை உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டதுடன், மனக்குறைகளை நீக்கி வெற்றிகரமாக நிகழ்வை நடத்துவதற்கான ஒருமித்த முடிவும் எடுக்கப்பட்டது.

மேலும் பிரதேச அபிவிருத்தி தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து சபையில் கலந்துரையாடப்பட்டதுடன், உறுப்பினர்களின் முன்மொழிவுகளும் பரிசீலிக்கப்பட்டன.

அமர்வின் நிகழ்ச்சி நிரலில் மத அனுஷ்டானம், ஏப்ரல் மாத கூட்டறிக்கை மற்றும் கணக்கறிக்கை உறுதிப்படுத்தல், மே மாத விசேட கூட்டறிக்கை உறுதிப்படுத்தல், தவிசாளரின் உரை உள்ளிட்ட விடயங்கள் இடம்பெற்றன.

அதேவேளை, உறுப்பினர்களான எஸ்.எம். ஷாபி, ஐ.எல்.எம். ஜாபிர், எம்.ஜே. ஜுவைரியா, கே.எம். ஜலீல், ஏ. இப்திகார், எம். சம்சுன் அலி மற்றும் எம்.ஏ.எம். றசீன் ஆகியோரின் முன்மொழிவுகளும் சபையில் எடுத்துரைக்கப்பட்டு மேலதிக நடவடிக்கைக்கு சபை தீர்மானம் நிறைவேற்றியது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எல்-நினோவால் நாட்டுக்குப் பாரிய பாதிப்புகள் ஏற்படும்...

2026-06-14 15:50:48
news-image

பாரிய கடத்தல் முறியடிப்பு: சொகுசு மோட்டார்...

2026-06-14 14:54:12
news-image

செம்மணி மனிதப்புதைகுழியை பார்வையிடவுள்ள ஐரோப்பிய ஒன்றியப்...

2026-06-14 14:53:38
news-image

மாகாணசபைத் தேர்தல்; சாணக்கியன் எம்.பியின் தனிநபர்...

2026-06-14 14:48:35
news-image

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு...

2026-06-14 15:02:36
news-image

டெங்கு உட்பட வைரஸ் காய்ச்சல் பரவல்...

2026-06-14 14:31:24
news-image

தேசிய கல்விக் கொள்கையின்றி கல்வி மறுசீரமைப்புகளை...

2026-06-14 13:48:36
news-image

எனது கணவர் செம்மணி படுகொலையை வெளிப்படுத்திய...

2026-06-14 12:49:37
news-image

சிறுபான்மை கட்சிகள் கூட்டிணைந்து ஜனாதிபதி அநுரவை...

2026-06-14 12:48:47
news-image

சலே எட்டு நாட்களாக ஒரு துளி...

2026-06-14 12:48:14
news-image

கண்டி - குருநாகல் வீதியில் விபத்து:...

2026-06-14 12:47:40
news-image

2.5 மில்லியன் டொலர் மோசடி பாராளுமன்றுக்கு...

2026-06-14 13:56:41