யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான பெண்ணுக்கு 07 வருட கடூழிய சிறைத்தண்டனையும் , ஒரு இலட்ச ரூபாய் தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.
பொம்மை வெளி பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாத பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்தார். அதன்போது அவரது உடைமையில் இருந்து 1 கிராம் 475 மில்லி கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டிருந்தது.
குறித்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில், இன்று (21) வியாழக்கிழமை குறித்த வழக்கு தீர்ப்புக்காக திகதியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் மேல் நீதிமன்றில் வழக்கு தீர்ப்புக்காக அழைக்கப்பட்ட போது, எதிரியான பெண்ணை குற்றவாளியாக கண்ட மன்று , பெண்ணுக்கு 07 வருட சிறைத்தண்டனை விதித்ததுடன் , ஒரு இலட்ச ரூபாய் தண்டப்பணமும் விதித்தது. தண்ட பணம் செலுத்த தவறின் , ஒரு வருட கால சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என மன்று தீர்ப்பளித்துள்ளது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM