நுண், சிறிய, நடுத்தர தொழில்களுக்கு பாரிய முதலீடு: தேசிய பொருளாதார வளர்ச்சியில் மக்கள் வங்கி பங்களிப்பு

Published By: Digital Desk 3

21 May, 2026 | 09:37 AM
image

வேலைவாய்ப்பு, பிராந்திய அபிவிருத்தி, தொழில்முயற்சியாண்மை, மற்றும் வருமானப் பகிர்வு ஆகியவற்றினூடாக இலங்கையின் பொருளாதாரத்தை முன்னெடுப்பதில் நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் தொடர்ந்தும் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. இத்துறையின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில், நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்பிரிவிற்கு ரூபா 20.8 பில்லியன் மதிப்புடைய வணிகத்தை நீட்டித்துள்ள மக்கள் வங்கி இத்துறையின் அபிவிருத்தி மீதான தனது அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது. நாட்டின் பொருளாதார மீட்சி மற்றும் நீண்ட கால வளர்ச்சி ஆகியவற்றில் முக்கிய பங்காளர் என்ற தனது வகிபாகத்தை இதன் மூலமாக மீளவும் உறுதிப்படுத்தியுள்ளது.  

இலங்கையில் உள்ள அரசுக்குச் சொந்தமான முன்னணி வர்த்தக வங்கிகளில் ஒன்று என்ற ரீதியில், அரசாங்கத்தின் தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சிநிரலின் பிரகாரம், நீண்ட கால மூலோபாய முன்னுரிமையாக நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்பிரிவை மக்கள் வங்கி நிலைநிறுத்தியுள்ளது. நெருக்கடிக்குப் பின்னரான மீட்சிக்கும் அப்பால், பிரத்தியேக நிதித் தீர்வுகள், ஆலோசனைச் சேவைகள், மற்றும் துறை நோக்குடனான கடன் வசதிகள் மூலமாக, தொடக்க வணிகங்கள், நுண் தொழில்முயற்சிகள் முதல் சிறப்பாக நிலைபெற்றுள்ள மற்றும் வளர்ச்சி கண்டு வருகின்ற தொழிற்துறைகள் வரை நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறையின் ஒட்டுமொத்த ஆயுள் சுழற்சிக்கு உதவுவதன் மீது கவனம் செலுத்தும் அணுகுமுறையை வங்கி பின்பற்றுகின்றது. 

நாடளவில் கொண்டுள்ள விசாலமான கிளை வலையமைப்பு மற்றும் உள்ளூர் பொருளாதாரங்கள் தொடர்பான ஆழமான புரிந்துணர்வு ஆகியவற்றுடன், நகர்ப்புற, கிராமப்புற, மற்றும் பின்தங்கிய சமூகங்கள் மதத்pயில் தொழில்முயற்சியாளர்களுக்கு வலுவூட்டி, நிதியியல் ரீதியாக அனைவரையும் அரவணைத்து உள்ளடக்கி மற்றும் பிராந்திய பொருளாதார அபிவிருத்திக்கு மக்கள் வங்கி தொடர்ந்தும் கணிசமான பங்களிப்பை வழங்கி வருகின்றது. 

2025ம் ஆண்டில் நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறையில் குறிப்பிடத்தக்க பல சாதனைகளை வங்கி பதிவாக்கியுள்ளது. நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறை வாடிக்கையாளர் தளம் 15.2% ஆல் அதிகரித்துள்ள அதேசமயம், நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறையுடனான வணிகத்தின் மதிப்பும் ரூபா 20.8 பில்லியனை எட்டியுள்ளது. ரூபா 6.9 பில்லியன் தொகை மதிப்பில் வழங்கப்பட்டுள்ள ‘புசநநn Pழறநச டுழயn’ எனப்படும் கடன் வசதி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் நிலைபேற்றியல் அபிவிருத்தி முயற்சிகளுக்கு வங்கியின் ஆதரவு அதிகரித்துச் செல்வதைப் பிரதிபலிக்கின்றது. இதை விட, ‘People’s Power Loan’ என்ற கடன் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடத்திற்குள் 74.6% என்ற கணிசமான வளர்ச்சியைப் பதிவாக்கியுள்ளமை நாடெங்கிலும் தொழில் முயற்சியாளர்கள் மற்றும் சிறு வணிகங்கள் மத்தியில் பலத்த கேள்வி நிலவுகின்றமையை எடுத்துக்காட்டுகின்றது.     

தேசிய பொருளாதார முன்னுரிமைகளுக்கு அமைவாக, இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமான பல்வேறு துறைகளை நோக்கி மக்கள் வங்கி தனது நிதி ஆதரவை திசைதிருப்பியுள்ளது. விவசாயம் மற்றும் வேளாண்மை வணிகம், உற்பத்தி மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட தயாரிப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செயற்திட்டங்கள், வாணிபம் மற்றும் சேவைகள், சுற்றுலாத்துறை, மற்றும் தொடர்புபட்ட தொழிற்துறைகள் அவற்றுள் அடங்கியுள்ளன. 

இதன் பயனாளிகள் மத்தியில் கணிசமான பங்கினர் தொடக்க வணிக முயற்சிகள், இளம் தொழில்முயற்சியாளர்கள், நுண் தொழில்முயற்சிகள், மற்றும் பெண்கள் தலைமையிலான வணிகங்கள் அடங்கியுள்ளமை அனைவரையும் அரவணைக்கின்ற மற்றும் சமத்துவமான பொருளாதார வளர்ச்சியின் மீது வங்கியின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. குறிப்பாக பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு வணிக ஆற்றல்கள் மற்றும் நீண்ட கால நிலைபேறு ஆகியவற்றை வலுப்படுத்தும் நோக்குடன், பிரத்தியேக மீள்கடன் திட்டங்கள் மற்றும் நிதியியல் அறிவூட்டல் நிகழ்ச்சித்திட்டங்கள் மூலமாக கூடுதல் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. 

வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களிலுள்ள வணிகங்களின் பல்வகைப்பட்ட நிதித் தேவைப்பாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட விரிவான பல்வகைப்பட்ட நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்பிரிவு கடன் தீர்வுகளை மக்கள் வங்கி வழங்குகின்றது. அன்றாட வணிகச் செயற்பாடுகளுக்கு உதவ நடப்பு மூலதன கடன்கள், எந்திரத்தொகுதி, உபகரண கொள்வனவுகள், வணிக விரிவாக்கம், மற்றும் நவீனமயமாக்கம் ஆகியவற்றுக்கான தவணைக்கடன்கள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செயற்பாடுகளுக்கான வாணிபக் கடன் வசதிகள், மேலதிகப்பற்றுக்கள், மற்றும் பணப்புழக்க முகாமைத்துவத்திற்கான சுழல் கடன் வசதிகள், விவசாயம், உற்பத்தி, சுற்றுலாத்துறை, நிர்மாணம், ஏற்பாட்டுப் பணிகள், மற்றும் சேவைகள் போன்று குறிப்பிட்ட துறைகளுக்கான கடன் தீர்வுகள் ஆகியன அவற்றுள் அடங்கியுள்ளன.  

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்கான அபிவிருத்தித் திட்டம் (Small and Medium Enterprises Development - SMED), வணிக வலுக் கடன் திட்டம் (Business Power Loan), சூரிய மின்வலு உற்பத்தி கடன் திட்டம் (Solar Power Generation Loan), பசுமை எரிசக்திக் கடன் திட்டம் (Power Loan), பீப்பிள்ஸ் ஸ்பார்க் கடன் திட்டம் (People’s SPARK Loan)> NCGIL கடன் திட்டம், பீப்பிள்ஸ் பவர் கடன் திட்டம் (People’s Power Loan), வனிதா சவிய கடன் திட்டம் (Vanitha Saviya Loan), அஸ்வென்ன கடன் திட்டம் (Aswenna Loan)> மற்றும் பிளெட்ஜ் கடன் திட்டம் (Pledge Loan) போன்ற நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறைக் கடன் திட்டங்கள் தற்போது மக்கள் வங்கியால் வழங்கப்பட்டு வருகின்ற கடன்களில் அடங்கியுள்ளன.         

வணிகத்தின் தன்மை, கடன் நோக்கம், மற்றும் கடன் மதிப்பீட்டு நடைமுறை ஆகியவற்றுக்கு அமைவாக கடன் தொகைகள், வட்டி வீதங்கள், மற்றும் மீள்கொடுப்பனவுத் தவணைகள் கட்டமைக்கப்படுகின்ற அதேசமயம், கைத்தொழில் அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறை வகைப்பாடுகளுக்கு இணங்க அவை முன்னெடுக்கப்படுகின்றன.  

நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறை கடன் வசதிகளை நாடுகின்ற வாடிக்கையாளர்கள் அருகாமையிலுள்ள மக்கள் வங்கிக் கிளைக்கு செல்லுமாறு ஊக்குவிப்பதுடன், பொருத்தமான கடன் தெரிவுகளை இனங்காண்பதற்கு கிளை முகாமையாளர்கள் மற்றும் கடன் அலுவலர்கள் தனிப்பட்ட உதவியை வழங்குவர். தேவையான தகைமைகள் குறித்து விளக்கி, விண்ணப்பிப்பது முதல் ஆவண நடைமுறைகள் வரை வாடிக்கையாளர்களுக்கு வழிகாட்டுவர். 

தொழில் முயற்சியாளர்களுக்கு வலுவூட்டி மற்றும் உள்நாட்டு தொழிற்துறைகளை வலுப்படுத்துவதில் தனது தொடர்ச்சியான அர்ப்பணிப்பினூடாக, இலங்கையின் நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறையின் நிலைபேறான வளர்ச்சிக்கு உதவுவதில் மக்கள் வங்கி தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளதுடன், நாட்டின் பரந்த பொருளாதார அபிவிருத்தி நோக்கங்களுக்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கி வருகின்றது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right