தோட்டத் தொழிலாளர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள்; இன்று பாராளுமன்றத்தில் விசேட கூட்டம்

Published By: Vishnu

21 May, 2026 | 06:42 AM
image

(எம்.மனோசித்ரா)

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன. இது குறித்து கடந்த பாராளுமன்ற அமர்வில் மலையக மக்கள் பிரதிநிதிகளால் வலியுறுத்தப்பட்டிருந்த நிலையில், தொழிலாளர்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதிப்படுத்துவது குறித்து ஆராய்வதற்கான விசேட கலந்துரையாடலொன்று இன்று வியாழக்கிழமை (21) பகல் 2 மணிக்கு பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் சமந்த வித்தியாரத்ன, 'கடந்த காலங்களில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ச்சியாகப் பல்வேறு தாக்குதல் சம்பவங்களுக்கு முகம்கொடுத்து வந்துள்ளனர். வரலாற்றில் அவர்கள் எதிர்கொண்ட இந்த மோசமான சூழல் மற்றும் அவலமான யுகம் தற்போது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. அண்மையில் பதிவான சம்பவங்கள் தொடர்பில் ஏற்கனவே சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், பாராளுமன்றத்திலும் இது குறித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

தொழிலாளர்களின் பாதுகாப்பை நூறு வீதம் உறுதிப்படுத்துவதற்காக இன்று நடைபெறும் விசேட உயர் மட்டக் கலந்துரையாடலானது, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோரின் தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பொலிஸ் உயர் அதிகாரிகள், பெருந்தோட்ட நிறுவனங்களின் (கம்பனிகளின்) பிரதிநிதிகள், பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திறைசேரி ஹேக்கிங்கை விட சர்வதேச நாணய...

2026-06-08 16:21:02
news-image

மகள் மீது பாலியல் துஷ்பிரயோகம் ;...

2026-06-08 15:56:39
news-image

அவுஸ்திரேலிய, நியூசிலாந்து பாராளுமன்றங்களில் அமைச்சர் விஜித...

2026-06-08 15:54:56
news-image

நானாட்டான் டிலாசால் கல்லூரி ஆசிரியரை இடமாற்ற...

2026-06-08 15:19:05
news-image

யாழ். சிறைச்சாலையில் சொல்லிசை பாடகர் சங்கீத்சனை...

2026-06-08 15:13:10
news-image

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த மகளிர் மற்றும்...

2026-06-08 14:49:42
news-image

திருடிய புராதன புத்தர் சிலையை விற்க...

2026-06-08 14:45:04
news-image

அக்கரப்பத்தனையில் போதைப்பொருளுடன் இருவர் கைது!

2026-06-08 14:43:44
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-06-08 14:39:59
news-image

அமெரிக்கா – இலங்கை ஒத்துழைப்பு :...

2026-06-08 14:20:03
news-image

சாரதி அனுமதிப்பத்திரமின்றி பயணிகளுடன் பஸ்ஸை செலுத்திய...

2026-06-08 14:39:00
news-image

"முழு நாடுமே ஒன்றாக" தேசிய திட்டம்:...

2026-06-08 14:34:19