(செ.சுபதர்ஷனி)
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கபில சந்திரசேனவுக்கு சார்பாக, 15 ஆயிரம் ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்டு போலிப் பிணையாளர்களாக நீதிமன்றில் முன்னிலையான இருவர் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த இருவர் உட்பட நால்வரை கொழும்பு நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் லஹிரு சில்வா புதன்கிழமை (20) பிணையில் விடுவித்து உத்தரவிட்டார்.
அதற்கமைய, சந்தேகநபர்கள் ஒவ்வொருவரையும் தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு உத்தரவிட்ட நீதவான், அவர்களுக்கு வெளிநாட்டுப் பயணத் தடையையும் விதித்தார்.
நேற்றைய தினம்மேற்படி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டப் போது, வாழைத்தோட்டம் பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் கே.டபிள்யூ.டி. அனுருத்த, நீதிமன்றில் மேலதிக அறிக்கையை ஒன்றை சமர்ப்பித்திருந்தார். அதனைத் தொடர்து மேற்படி சந்தேகநபர்கள் பிணையாளராக முன்னிலையான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கபில சந்திரசேன தற்போது உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் அவரின் மரணத்துக்கும் இந்த போலிப் பிணையாளர்களின் முறைகேடான செயற்பாடுகள் ஏதேனும் ஒரு வகையில் அடித்தளமாக அமைந்ததா என்பது குறித்து பொலிஸார் தற்போது விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என நீதிமன்றில் தெரிவித்திருந்தார். இதையடுத்து, சந்தேகநபர்களுக்குப் பிணை நிற்பவர்களின் வசிப்பிடத்தை உறுதிப்படுத்தும் கிராம உத்தியோகத்தர் சான்றிதழ்கள் மற்றும் சொத்து விபரங்களை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதிவான் அதிகாரிகளை பணித்திருந்தார்.
மேலும் சந்தேகநபர்களு வெளிநாட்டுப் பயணத் தடை விதித்த நீதிவான் தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு உத்தறவு பிறப்பித்திருந்ததுடன், வழக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 25 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் உள்ள சாஞ்சி ஆராச்சிவத்தையைச் சேர்ந்த முகமது ரிஸ்வான், முகமது இர்கான், பி.ஏ. திஸ்ஸ மற்றும் பெருமாள் கணேஷ் ஆகிய நால்வரே இவ்வாறு பிணையில் விடுக்கப்பட்டுள்ளனர். ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் வழக்கின் பிரதிவாதியான கபில சந்திரசேனவை 100 மில்லியன் ரூபா பெறுமதியான 3 சரீரப் பிணைகளில் விடுவிப்பதற்காக, தமக்கு அவரை யாரென்று தெரியாத நிலையிலும், பணத்திற்காகவே இவர்கள் போலிப் பிணையாளர்களாக ஆஜராகிய நிலையில் முகமது ரிஸ்வான், முகமது இர்கான் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.
இவர்களில் பெருமாள் கணேஷ் என்பவர் அரவிந்த டி சில்வாவின் சாரதியாகப் பணிபுரிந்தவர் என்பதுடன், அவரே திஸ்ஸ என்பவிரின் மூலம் போலி பிணையாளர்களை ஏற்பாடு செய்திருந்தமை வாழைத்தோட்டம் பொலிஸார் முன்னெடுத்திருந்த விசாரணைகளில் தெரியவந்திருந்தது. இவர்களில் ஒரு சந்தேகநபர் 10 சந்தர்ப்பங்களிலும், மற்றையவர் 7 சந்தர்ப்பங்களிலும் வெவ்வேறு வழக்குகளுக்கு போலி கிராம உத்தியோகத்தர் சான்றிதழ்களைப் பயன்படுத்தி பிணையாளர்களாக முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM