மலையக வாழ் மக்களுக்கு நில உரிமை கோரி, ஜனாதிபதி செயலகத்திற்கும் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகத்திற்கும் கடிதம் வழங்குவதற்காக தலவாக்கலை நகரத்திலிருந்து 140 கிலோமீட்டர் கொண்ட கொழும்பிற்கு புதன்கிழமை (20) காலை நடைப்பயணத்தை ஆரம்பித்த 7 வயது பாடசாலை மாணவனை ஹட்டன் பொலிஸார் தடுத்து நிறுத்தப்பட்டதாக ஹட்டன் பிரதேச பொலிஸ் கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகர தெரிவித்தார்.
லிந்துலை, மேலசாக்கலைச் தோட்டத்தைச் சேர்ந்த பிரேம்ராஜ் கார்த்தி என்ற 11 வயது சிறுவன், தலவாக்கலையிலிருந்து கொழும்புக்கு மிகக் குறைந்த நேரத்தில் பயணம் செய்து மக்களின் பிரச்சினைகள் தீர்க்கவும் , தலவாக்கலையிலிருந்து கொழும்புக்கு மிகக் குறைந்த நேரத்தில் பயணம் செய்து சாதனை படைக்கும் நோக்கில் இந்த நடைப்பயணத்தைத் தொடங்கினார்.
இந்நிலையில் தலவாக்கலையில் தொடங்கி கொட்டக்கலை நகர் வழியாக சுமார் 21 கிலோமீட்டர் தூரம் பயணித்து ஹட்டனில் உள்ள மல்லியப்பு சந்தியை அடைந்தபோது, ஹட்டன் பிரதேச மகளிர் பணியகத்தின் பிரதம ஆய்வாளர் குமாரி விஜேசிங்க மற்றும் ஹட்டன் நன்னடத்தை அலுவலக அதிகாரி ஆகியோர் அந்தப் பாடசாலை மாணவனையும் அவரது பெற்றோர்களையும் ஹட்டன் நகரத்திற்கு வரவழைத்து, ஒரு சிறு வயது மாணவனைப் பயன்படுத்தி இதுபோன்ற ஒரு நடைபயணத்தை நடத்துவது சாத்தியமில்லை என்று எதிர்ப்பு தெரிவித்து நடையணத்தை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் கூறுகையில் இந்த சிறிய வயதுடைய சிறுவனை பயன்படுத்தி ஏற்பாடு செய்த அனைவரிடமும் தனித்தனியே வாக்குமூலங்கள் பெறப்பட்டு, இச்சம்பவம் தொடர்பாக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும், நடைபயணத்திற்கு பயன்படுத்தப்பட்ட சிறுவன் நன்னடத்தை அதிகாரிகள் மூலம் தெளிவூட்டல் செய்து அவனது பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவார் என்றும் தெரிவித்தனர்.
மேலும் தொடர்ந்து இது போன்ற சிறுவர்களை பயன்படுத்தி துன்புறுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM