Search for Common Ground – SFCG அமைப்பானது கிழக்கு மாகாணத்தில் அரசியலில் பெண்களின் வகிபாகத்தினை அதிகரித்தல், பெண்கள் தொடர்பில் இயங்குகின்ற சிவில் சமூக அமைப்புக்கிடையில் வலையமைப்பினை உருவாக்குதல் போன்ற விடயங்களை முன்னெடுப்பது தொடர்பில் செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
இதற்கான நிதியுதவியினை UNDP வழங்குகின்றது. இத்திட்ட செயற்பாடுகளில் கலந்துகொண்ட உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள், பொறுப்புகூறுநர்கள் மற்றும் பங்குதார நிறுவனங்களின் பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுக்கு பின்னரான பின்னூட்டங்களின் அடிப்படையில் அடுத்த கட்ட திட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த அடிப்படையில் இத்திட்டத்தின் கீழான நிதியுதவியுடன் பெண்கள் அபிவிருத்தி நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஓர் அங்கமாக கடந்த 11.05.2026 அன்று காரைதீவில் உள்ளுராட்சி மன்றங்களின் பெண்பிரதிநிதிகளுக்கான செயலமர்வு இடம்பெற்றது. "பாதுகாப்பும் சட்டமும்" எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இச்செயலமர்வின் வளவாளராக சட்டத்தரணி மீரா மொகைதீன் பயிற்சிகளை மேற்கொண்டார்.
உள்ளுராட்சி மன்றங்களின் 15 பிரதிநிதிகள் பங்குபற்றியதுடன் சட்டங்கள் மற்றும் அவற்றினை அணுகுவது தொடர்பில் பயிற்சிகளையும் பெற்றுக்கொண்டனர்.
இப்பயிற்சி தொடர்பில் கருத்துதெரிவித்த பெண் பிரதிநிதிகள் இவ்வாறான பயிற்சிகளை பெண்கள் அபிவிருத்தி நிறுவனம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை தம்மைப்போன்ற பிரதிநிதிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைவதாக தெரிவித்தனர். இதன் தொடர் நிகழ்வுகள் எதிர்வரும் நாட்களிலும் வெவ்வேறு தலைப்புகளில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான வலுப்படுத்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுவதன் மூலம் உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாக அபிவிருத்திகளையும் நிலையான தீர்வுகளையும் நோக்கி பயணிப்பதற்கான முன்னெடுப்புக்கள் இதன் மூலம் உருவாக்கப்படுகின்றது. மேலும் பெண்கள் அபிவிருத்தி நிறுவனம் ஆனது தொடர்ச்சியாக இவ்வாறான பயிற்சி மற்றும் செயலமர்வு நிகழ்வுகளை அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM