(செ.சுபதர்ஷனி)
நாட்டில் தற்போது சுமார் 2500 பேர் தலசீமியா நோயுடன் வாழ்ந்து வருவதோடு, வருடாந்தம் 50 தொடக்கம் 60 குழந்தைகள் தலசீமியா நோயுடன் பிறக்கின்றனர் என சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் ஸ்ரீனி அழகப்பெரும தெரிவித்தார்.
தலசீமியா நோய் தொடர்பில் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் புதன்கிழமை (20) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாட்டில் தற்போது சுமார் 2,500 பேர் தலசீமியா நோயுடன் வாழ்ந்து வருகின்றனர். அந்தவகையில் வருடாந்தம் 50 தொடக்கம் 60 குழந்தைகள் தலசீமியா நோயுடன் பிறக்கின்றனர் என்பது வருந்தத்தக்க விடயமாக உள்ளது. நாட்டில் குருநாகல் மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். அத்தோடு குருநாகல், பதுளை, கண்டி, மட்டக்களப்பு உள்ளிட்ட பிரதான 6 மாவட்டங்களைக் கேந்திர நிலையமாகக் கொண்டு தலசீமியா நோய் சிகிச்சை மற்றும் பரிசோதனை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
தலசீமியா நோயாளர் ஒருவருக்கு மாதாந்தம் இரத்தம் மாற்றுவதோடு, இரும்புக் கனிமப் படிவதைக் கட்டுப்படுத்துவதற்கும் வாழ்நாள் முழுவதும் தொடர்ச்சியான சிகிச்சையைப் பெறுவது அவசியம். இந்தச் சிகிச்சைகளுக்காக அரசாங்கத்தால் சுமார் 6 - 8 மில்லியன் ரூபா வரை செலவிடப்படுகிறது. ஒட்டுமொத்த சனத்தொகையில் 3 சதவீதமானோருக்கு தலசீமியா நோய் உள்ளதாக ஆய்வுகளில் தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே தலசீமியா நோயுள்ள இருவர் திருமண பந்தத்தில் இணைவதால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் இந்நோயுடன் பிறக்கின்றனர். ஆகையால் இரத்த உறவுகளுக்கு இடையிலான திருமண பந்தங்களைத் தவிர்ப்பதே இதற்குச் சிறந்த வழி. அல்லது திருமணத்துக்கு முன்னர் தலசீமியா நோய் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொண்டு ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியமாகும் என்றார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM