டயகமவில், மரம் முறிந்து விழுந்ததில் நான்கு பிள்ளைகளின் தாய் உயிரிழந்தார்.

டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம மேற்குத் தோட்டத்தைச் சேர்ந்த ஐம்பத்தாறு வயதுப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

விறகு சேகரிப்பதற்காக இன்று மாலை ஆறுமணியளவில் அருகிலுள்ள காட்டிற்குச் சென்றபோதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சடலமானது பிரேத பரிசோதனைக்காக தற்போது டயகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் டயகம பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.