இலங்கையில் பௌத்த மற்றும் இஸ்லாமிய சமூகங்களுக்கு இடையிலான புரிந்துணர்வை மேம்படுத்தும் நோக்கில் கலாநிதி ஆசாத் சிராஸ் மற்றும் கலாநிதி ரமேஷ் மதுசங்க ஆகியோரால் சிங்கள மொழியில் எழுதப்பட்ட ‘பௌத்தம் - முஸ்லிம் கலந்துரையாடல்’ எனும் நூல் அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
தன்வீர் அகடமி நிறுவனத்தின் அனுசரணையுடன் நடைபெற்ற இந்த வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக பௌத்தம், மத விவகார மற்றும் கலாசார அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி கலந்துகொண்டார். கௌரவ அதிதியாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்ஷேக் அர்க்கம் நூராமித் பங்கேற்றார். பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் சமந்த இலங்கக்கோன் நூலின் விமர்சன உரையை நிகழ்த்தினார்.
அரசியல் பிரமுகர்கள், பௌத்த, இந்து, கிறிஸ்தவ மதகுருமார், மௌலவிமார்கள் மற்றும் கல்வியலாளர்கள் என பெரும் எண்ணிக்கையிலானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
(படப்பிடிப்பு - ஜே . சுஜீவகுமார்)






























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM