(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
வீதி அபிவிருத்தி அதிகார சபை ஒப்பந்தகாரர்களுக்கு 380 மில்லியன் ரூபா வரையான நிதியை இரண்டு முறை வைப்பிலிட்டுள்ளதாக போலியான செய்தியை வெளியிட்ட எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. சகல நெடுஞ்சாலைகள் ஊடாக மொத்த வருமானம் 16,330.14 மில்லியன் ரூபாவாக கிடைக்கப்பெற்றுள்ளது என நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி மற்றும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (20) நடைபெற்ற அமர்வின்போது வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின்போது பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் தற்போது 8332 பேர் பணியாற்றுகிறார்கள். மாகாண சபைகளின் கீழ் உள்ள வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் 4217.42 கி.மீ. எ தர வீதி, 8,045.42 கி.மீ. பி தர வீதிகள் உள்ளன.
2021ஆம் ஆண்டு 4,606.02 மில்லியன் ரூபா, 2022ஆம் ஆண்டு 2,504.01 மில்லியன் ரூபா, 2023ஆம் ஆண்டு 6,039.22 மில்லியன் ரூபா, 2024ஆம் ஆண்டு 11,249.81 மில்லியன் ரூபா, 2025ஆம் ஆண்டு 14,591.16 மில்லியன் ரூபா என்ற அடிப்படையில் நெடுஞ்சாலை வீதி பராமரிப்புக்கான செலவுகள் பதிவாகியுள்ளன.
கட்டப்பட்ட இரட்டை வழி வீதி ஒன்றுக்கு கிலோ மீற்றரை புதிதாக நிர்மாணிப்பதற்காக சுமார் 306 மில்லியன் ரூபா செலவாகின்ற அதேவேளையில் அதில் அடங்கியுள்ள பொருட்களின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு ஏற்படும்.மேலும் புனரமைப்பு கருத்திட்டங்களுக்கு 200 மில்லியன் ரூபா முதல் 250 மில்லியன் வரை ரூபா வரை செலவாகும்.
கட்டப்பட்ட 4 வழி வீதி ஒன்றுக்கு கிலோ மீற்றரை புதிதாக நிர்மாணிப்பதற்காக 800 மில் ரூபா - 1000 மில் ரூபா செலவாகின்ற அதேவேளையில் அதில் அடங்கியுள்ள பொருட்களின் ஏற்றத்தாழ்வு ஏற்படும். அடிப்படையில் மேலும் புனரமைப்பு கருத்திட்டங்களுக்கு ரூபா 200 மில்லியன் முதல் ரூபா 250 மில்லியன் ரூபா வரை செலவாகும்.
கடந்த கேள்விமனுக்களுக்கு அமைவாக மேற்குறிப்பிட்ட செலவு 25 சதவீதம் முதல் 25 சதவீதம் வரையான இடைவெளியில் வீதி காணப்படுகின்ற நிலத்தில் இருக்கும் தன்மைக்கு அமைவாகவும் பொருட்களின் அடிப்படையிலும் ஏற்பட்டுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலைகளின் மூலம் அரசாங்கத்திற்கு 2025.12.31ஆம் திகதியளவில் 16,330.14 மொத்த வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது.
மத்திய அதிவேக நெடுஞ்சாலை கட்டம் 01 (கடவத்தை முதல் மீரிகம வரை), மத்திய அதிவேக நெடுஞ்சாலை கட்டம் 03 (பொதுஹெர முதல் ரம்புக்கன வரை) நிர்மாண பணிகள் மேற்கொள்ளப்படுகின்றது. (ரம்புக்கன முதல் கலகெதர வரை) நிர்மாணிக்கப்படவுள்ளது. மத்திய அதிவேக நெடுஞ்சாலை கட்டம்04 (குருநாகல் முதல் தம்புள்ள வரை) நிர்மாணிக்கப்படவுள்ளது. இரத்தினபுரி அதிவேக நெடுஞ்சாலை (கஹத்துடுவ முதல் இங்கிரிய வரை) நிர்மாணிக்கப்படவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM