பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் சுரேஷ் சலே! 

20 May, 2026 | 03:26 PM
image

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று புதன்கிழமை (20) ஆஜர்படுத்தப்பட்டார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் அவர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் சுரேஷ் சலேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. 

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்தான விசாரணைகள் தொடர்பில் சுரேஷ் சலே கடந்த பெப்ரவரி மாதம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார். 

அதன் பின்னர், விசாரணைகள் தொடரும் நிலையில் அவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் நிலையிலேயே இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருக்கிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாரிய கடத்தல் முறியடிப்பு: சொகுசு மோட்டார்...

2026-06-14 14:54:12
news-image

செம்மணி மனிதப்புதைகுழியை பார்வையிடவுள்ள ஐரோப்பிய ஒன்றியப்...

2026-06-14 14:53:38
news-image

மாகாணசபைத் தேர்தல்; சாணக்கியன் எம்.பியின் தனிநபர்...

2026-06-14 14:48:35
news-image

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு...

2026-06-14 15:02:36
news-image

டெங்கு உட்பட வைரஸ் காய்ச்சல் பரவல்...

2026-06-14 14:31:24
news-image

தேசிய கல்விக் கொள்கையின்றி கல்வி மறுசீரமைப்புகளை...

2026-06-14 13:48:36
news-image

எனது கணவர் செம்மணி படுகொலையை வெளிப்படுத்திய...

2026-06-14 12:49:37
news-image

சிறுபான்மை கட்சிகள் கூட்டிணைந்து ஜனாதிபதி அநுரவை...

2026-06-14 12:48:47
news-image

சலே எட்டு நாட்களாக ஒரு துளி...

2026-06-14 12:48:14
news-image

கண்டி - குருநாகல் வீதியில் விபத்து:...

2026-06-14 12:47:40
news-image

2.5 மில்லியன் டொலர் மோசடி பாராளுமன்றுக்கு...

2026-06-14 13:56:41
news-image

தமிழ்ச்சமூகத்தின் மாபெரும் ஆளுமை கலாநிதி தேவநேசன்...

2026-06-14 12:34:42