பல் உள்ளுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை – வெற்றி வீதம் உயர்வதாக நிபுணர்கள் தகவல்

Published By: Digital Desk 2

20 May, 2026 | 02:59 PM
image

உலகளவில் கடுமையான மற்றும் சிக்கலான நோய் பாதிப்புகளுக்கு ஆளாகும் நோயாளிகளுக்கு நவீன மருத்துவ தொழில்நுட்பங்களின் உதவியுடன் பல்வேறு மேம்பட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, ஒரே நேரத்தில் பல உள்ளுறுப்புகளை மாற்றும் மல்டி-ஆர்கன் டிரான்ஸ்பிளான்ட் அறுவை சிகிச்சை அறிமுகமாகி, அதன் வெற்றி வீதமும் அதிகரித்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மருத்துவ மொழியில் “மல்டிவிசரல் மாற்று அறுவை சிகிச்சை” என அழைக்கப்படும் இந்த முறையில், வயிறு, சிறுகுடல், கணையம், கல்லீரல் மற்றும் பெருங்குடல் போன்ற முக்கிய உள்ளுறுப்புகளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவை ஒரே நேரத்தில் மாற்றப்படுகின்றன. பொதுவாக கடுமையான குடல் செயலிழப்பு, பல உறுப்பு செயலிழப்பு அல்லது உயிருக்கு ஆபத்தான கட்டிகள் போன்ற சிக்கலான நிலைகளில் இந்த சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.

அறுவை சிகிச்சையின் போது பாதிக்கப்பட்ட உறுப்புகள் முழுமையாக அகற்றப்பட்டு, மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து பெறப்பட்ட தான உறுப்புகள் பொருத்தப்படுகின்றன. இதன் மூலம் செரிமான மண்டலத்தின் இயல்பு செயல்பாடு மீண்டும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இத்தகைய சிகிச்சை மிகவும் சிக்கலானது என்பதுடன், பல்வேறு துறை நிபுணர்களின் ஒருங்கிணைந்த பங்களிப்பு அவசியம் எனவும் கூறப்படுகிறது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு உறுப்புகள் சரியாக செயல்படுகிறதா என்பதை உறுதி செய்ய தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பும் தேவைப்படுகிறது.

தற்போது பல உள்ளுறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளின் வெற்றி வீதம் சுமார் 70% முதல் 80% வரை உயர்ந்துள்ளதாக மருத்துவ தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த வகை சிகிச்சை குடல் செயலிழப்பு, கல்லீரல் நோய், கணைய குறைபாடு மற்றும் புற்றுநோய் போன்ற கடுமையான நிலைகளில் நோயாளிகளுக்கு புதிய வாழ்க்கை நம்பிக்கையை வழங்குவதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

தொகுப்பு: அனுஷா
மருத்துவ ஆலோசனை: மருத்துவர் அன்பழகன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிட்யூற்றரி கட்டி பாதிப்பிற்கான நவீன சத்திர...

2026-06-16 17:30:24
news-image

பாராதைரொய்ட் சுரப்பி வீக்கம் மற்றும் கட்டி...

2026-06-15 14:59:38
news-image

கன்ஸ்டிரிக்டிவ் பெரிகார்டிடிஸ் எனும் இதய பாதிப்பிற்கான...

2026-06-12 14:16:00
news-image

அஸ்பெர்கில்லோமா எனும் நுரையீரல் பாதிப்பிற்குரிய நவீன...

2026-06-11 17:22:11
news-image

உடற்பருமனால் பாதிக்கப்படும் வளரிளம் பருவத்தினரின் எண்ணிக்கை...

2026-06-10 16:00:56
news-image

க்யூபிடல் டன்னல் சிண்ட்ரோம் எனும் முழங்கை...

2026-06-09 18:18:06
news-image

இதய செயலிழப்பு பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் இம்பெல்லா...

2026-06-09 07:16:20
news-image

புரோஸ்டேட் சுரப்பி வீக்க பாதிப்பிற்கான நவீன...

2026-06-08 17:01:59
news-image

அயோட்டிக் டிஸ்சக்சன் எனும் இதய ரத்த...

2026-06-05 16:14:23
news-image

தழும்புகளற்ற தைரொய்க்டொமி எனும் நவீன சத்திர...

2026-06-04 17:33:23
news-image

மெட்டபொலிக் என்செபலோபதி ஹைபோநெட்ரீமியா எனும் பாதிப்பிற்குரிய...

2026-06-03 15:08:28
news-image

தனிமை அதிகமானால் குருதி அழுத்த பாதிப்பும்...

2026-06-02 17:55:09