பூகோள நெருக்கடியால் ஏற்பட்டுள்ள விலையேற்றம் தற்காலிகமானதே - சுற்றாடல்துறை அமைச்சர்

20 May, 2026 | 02:58 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

நாட்டில் பொருளாதார நெருக்கடி இனி ஒருபோதும் தோற்றம் பெறாது. பொருளாதார ஸ்திரப்படுத்தலுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பூகோள நெருக்கடியால் ஏற்பட்டுள்ள விலையேற்றம் தற்காலிகமானதே என சுற்றாடல் துறை அமைச்சர் தம்மிக்க பட்டபெந்தி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (20) நடைபெற்ற அமர்வின்போது  இலங்கை  மத்திய வங்கியின் 2025ஆம் ஆண்டுக்கான பொருளாதார  மீளாய்வு   அறிக்கை  தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

மத்திய கிழக்கில் மோதல் நிலைமை நாளுக்கு நாள் தீவிரமடைவதால் உலகளாவிய பொருட்கள் மற்றும் சேவை விநியோகம் பாதிக்கப்பட்டு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்படும், மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக வீதிக்கு இறங்குவார்கள் என்று எதிர்க்கட்சியினர் குறிப்பிடுகிறார்கள். அவ்வாறான நிலை ஏற்படவேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார்கள்.

2022ஆம் ஆண்டின் பொருளாதார நெருக்கடி நிலைமை மீண்டும் தோற்றம் பெறாது. பொருளாதார ஸ்திரப்படுத்தலுக்குரிய நடவடிக்கைகள் மற்றும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

2026ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தில் தான் பாதீட்டுக்கான பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளது. அரச செலவுகள் குறைக்கப்பட்டு அவை மக்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கின் மோதல் நிலைமையினால் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவை விநியோகத்தின் கட்டணம் உயர்வடைந்துள்ளது. இதனால் எரிபொருள் உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளன. இந்த விலையேற்றம் தற்காலிகமானதே என்று குறிப்பிட்டுக்  கொள்கிறோம்.

தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு விவசாயத்துறையை முன்னேற்ற வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகள் துறைசார் மட்டத்தில்  மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொருளாதாரம் மீண்டும் பாதிக்கப்படும். அதனூடாக அரசியல் இலாபமடையலாம் என்று கருதும்  எதிர்க்கட்சியின் எண்ணம் ஒருபோதும் வெற்றிபெறாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எல்-நினோவால் நாட்டுக்குப் பாரிய பாதிப்புகள் ஏற்படும்...

2026-06-14 15:50:48
news-image

வலி.வடக்கில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு 36...

2026-06-14 16:03:04
news-image

பொலிஸ் விசேட சோதனை நடவடிக்கை குற்றச்செயல்களுடன்...

2026-06-14 16:00:39
news-image

முழு நாடுமே ஒன்றாக என்னும் நடவடிக்கைகமைய...

2026-06-14 16:00:10
news-image

பாரிய கடத்தல் முறியடிப்பு: சொகுசு மோட்டார்...

2026-06-14 14:54:12
news-image

செம்மணி மனிதப்புதைகுழியை பார்வையிடவுள்ள ஐரோப்பிய ஒன்றியப்...

2026-06-14 14:53:38
news-image

மாகாணசபைத் தேர்தல்; சாணக்கியன் எம்.பியின் தனிநபர்...

2026-06-14 14:48:35
news-image

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு...

2026-06-14 15:02:36
news-image

டெங்கு உட்பட வைரஸ் காய்ச்சல் பரவல்...

2026-06-14 14:31:24
news-image

தேசிய கல்விக் கொள்கையின்றி கல்வி மறுசீரமைப்புகளை...

2026-06-14 13:48:36
news-image

எனது கணவர் செம்மணி படுகொலையை வெளிப்படுத்திய...

2026-06-14 12:49:37
news-image

சிறுபான்மை கட்சிகள் கூட்டிணைந்து ஜனாதிபதி அநுரவை...

2026-06-14 12:48:47