திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை கண்டி பிரதான வீதியின் ஜெயபுர பகுதியில் இன்று புதன்கிழமை (20) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு விபத்தில் உயிரிழந்தவர் ஹிங்குராகொட பகுதியை சேர்ந்த 62 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சிரிய ரக பட்டா வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரே உயிரிழந்துள்ளார்.
திருகோணமலையில் இருந்து வந்த பட்டா ரக வாகனமும் திருகோணமலை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளுமே இவ்வாறு மோதி விபத்து சம்பவித்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து சம்பவத்தில் தொடர்புடைய வாகன சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளில் தம்பலகாமம் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM