‘ஆர்ஆர்ஆர்’ மற்றும் ‘தேவரா’ திரைப்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமான பான் இந்திய நட்சத்திர நடிகர் ஜூனியர் என்டிஆர் நடித்துவரும் ‘டிராகன்’ திரைப்படத்தின் அறிமுகக் காணொளி, அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது.
இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டிராகன்’ திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆர், அனில் கபூர், பிஜு மேனன், ருக்மணி வசந்த், குஷ்பூ சுந்தர், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். புவன் கவுடா ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார்.
எக்சன் என்டர்டெய்னராக உருவாகி வரும் இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நந்தமூரி கல்யாண் ராம், நவீன் யெர்னேனி, வை. ரவி சங்கர் மற்றும் ஹரிகிருஷ்ணா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். டி-சீரிஸ் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் குல்சன் குமார் மற்றும் பூஷன் குமார் வழங்குகின்றனர்.
படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஜூனியர் என்டிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களின் கோரிக்கைக்கு இணங்க அறிமுகக் காணொளி வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியிடப்பட்ட இந்த காணொளி, குறுகிய காலத்திலேயே 25 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று சாதனை படைத்து வருகிறது.
இந்த அறிமுகக் காணொளியில் இயக்குநர் பிரசாந்த் நீலின் பிரம்மாண்ட கற்பனையும், ஜூனியர் என்டிஆரின் மாஸ் தோற்றமும், அதிரடி காட்சிகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM