யாழ்ப்பாணம், அராலி வடக்கு இலந்தைத்தாழ்வுப் பகுதியில் அமைந்துள்ள முருகமூர்த்தி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா நாளை (21) வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
இவ்விழா நாளைய தினம் ஆரம்பமாகி தொடர்ந்து 11 தினங்கள் நடைபெறவுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.
ஆரம்பகட்ட கிரியைகள்
மஹோற்சவத்தின் ஆரம்பகட்ட கிரியைகளான விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, கிராமசாந்தி மற்றும் அனுக்ஞை ஆகியன இன்று புதன்கிழமை (20) மாலை 5 மணி முதல் ஆலயத்தில் நடைபெறவுள்ளன.
நாளை வியாழக்கிழமை (21) ஆரம்பமாகும் மஹோற்சவப் பெருவிழாவின் முக்கிய திருவிழாக்கள் நடைபெறும் நாட்கள் பின்வருமாறு,
கொடியேற்றம்: வியாழக்கிழமை (21) அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து காலை 6.30 மணிக்கு சங்கல்பம், ஸ்தபன அபிஷேகம், காலை 9.00 மணிக்கு வசந்தமண்டப பூஜை என்பன நடைபெற்று காலை 10.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெறும்.
சப்பர உற்சவம்: 28ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 7 மணிக்கு நடைபெறும்.
தேர்த் திருவிழா: 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு நடைபெறும்.
தீர்த்தோற்சவம்: 30ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு தீர்த்தத் திருவிழாவும், அன்று மாலை 6.30 மணிக்கு கொடியிறக்கமும் நடைபெறும்.
திருக்கல்யாண உற்சவம்: 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.
தினசரி வழிபாட்டு நேரங்கள்
மகோற்சவ காலங்களில் தினசரி காலை 7.30 மணிக்கு சங்கல்பம், ஸ்தபன அபிஷேகம், காலை 10.30 மணிக்கு வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து சுவாமி உள்வீதி உலா வரும்.
அதேபோல், மாலை 4.30 மணியளவில் யாக பூஜை, சகஸ்ரநாம அர்ச்சனை என்பனவற்றைத் தொடர்ந்து மாலை 6.00 மணிக்கு வசந்தமண்டப பூஜையுடன் சுவாமி வெளிவீதி உலா வரும்.
உற்சவ காலங்களில் ஆலயத்துக்கு செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM