மூதூரில் மரம் சாய்ந்து விழுந்ததில் மீனவர்களின் படகுகள் சேதம்

Published By: Digital Desk 3

20 May, 2026 | 01:32 PM
image

திருகோணமலை, மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தக்வா நகர் கடற்கரை பகுதியில், கடலுக்கு சென்று திரும்பிய பின்னர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவர்களின் படகுகள் மீது மரம் சாய்ந்து விழுந்ததில் இரண்டு படகுகள் சேதமடைந்துள்ளன.

இந்த சம்பவம் இன்று (20) புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. 

சம்பவத்தின் போது  படகு ஒன்று கடுமையாக சேதமடைந்ததுடன், மற்றொரு படகு பகுதி அளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது பருவக் காற்று பலமாக வீசத் தொடங்கியுள்ள நிலையில், கடற்கரைப் பகுதிகளில் உள்ள மரங்கள் ஆபத்தான நிலையில் காணப்படுவதாகவும், இதன் காரணமாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தால் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. 

இருப்பினும், பாதிக்கப்பட்ட மீனவர்கள் தங்களின் வாழ்வாதார உபகரணங்கள் சேதமடைந்துள்ளதால் கவலை வெளியிட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கலால் வரி ஆணையாளருக்கு எதிராக ராஜகிரியவில்...

2026-06-08 16:58:43
news-image

இலங்கையில் தடையை மீறி மின்-சிகரெட்டுகள் விற்கப்படுகிறது...

2026-06-08 17:03:05
news-image

25 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் பெண்...

2026-06-08 16:57:39
news-image

வல்வெட்டித்துறையில் கைது செய்யப்பட்ட சங்கீதனை விடுதலை...

2026-06-08 16:51:53
news-image

அநுராதபுரம் சிறுமி விவகாரம்: நீதிமன்ற உத்தரவுப்படி...

2026-06-08 16:46:04
news-image

சுவிஸ் தூதுவர் - ஆறு.திருமுருகன் இடையே...

2026-06-08 16:40:00
news-image

பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை பயன்படுத்தியதன் மூலம்...

2026-06-08 16:34:47
news-image

திறைசேரி ஹேக்கிங்கை விட சர்வதேச நாணய...

2026-06-08 16:21:02
news-image

மகள் மீது பாலியல் துஷ்பிரயோகம் ;...

2026-06-08 15:56:39
news-image

அவுஸ்திரேலிய, நியூசிலாந்து பாராளுமன்றங்களில் அமைச்சர் விஜித...

2026-06-08 15:54:56
news-image

நானாட்டான் டிலாசால் கல்லூரி ஆசிரியரை இடமாற்ற...

2026-06-08 15:19:05
news-image

யாழ். சிறைச்சாலையில் சொல்லிசை பாடகர் சங்கீத்சனை...

2026-06-08 15:13:10