(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
மாகாண அரசாங்க பிரதான குற்றப்பகர்வு அலுவலகங்களை நிறுவ உயர்நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட தலைமையில் குழுவின் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
இன்று (20) பாராளுமன்றத்தில் இவ்வாறு தெரிவித்த அமைச்சர், மேலும் கூறுகையில்,
இந்த பணிகளை மேற்கொள்வதற்கு சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் நீதிச் சேவை ஆணைக்குழு ஆகியவற்றிடம் ஆலோசனைகள் கோரப்பட்டுள்ளன.
இது எவ்வகையிலும் எளிமையான காரியம் அல்ல. ஆனால் செய்யவேண்டிய ஒரு விடயம். இதற்கு சில காலம் எடுக்கும். இதனைச் சரியான முறையில் செய்யவேண்டும் என்பதனாலேயே தாமதம் ஏற்பட்டுள்ளது என்றார்.
அமர்வின்போது வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின்போது ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி.பெரேரா முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு வெளியே அரசாங்கம் சார்பாக வழக்கு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக,மாகாண அரசாங்க பிரதான குற்றப்பகர்வு அலுவலகங்கள் நிறுவப்படும் என வளமான நாடு -அழகான வாழ்க்கை கொள்கைப் பிரகடனத்தில் வாக்குறுதியளித்தோம்.
குறித்த அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்திற்கு அமைய, சட்டமா அதிபர் திணைக்களத்திற்குப் புறம்பாக சுயாதீன அரச தலைமை அரசுத்தரப்பு அலுவலகத்தை நிறுவுவது தொடர்பாக பரிந்துரைகளை வழங்குவதற்காக, உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவரின் தலைமையில் குழுவொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அக்குழுவினால் வழங்கப்படும் பரிந்துரைகளின் அடிப்படையில், அரச தலைமை அரசுத்தரப்பு அலுவலகத்தை நிறுவுவது மற்றும் அதற்கமைய மாகாண அரச அலுவலகங்களை நிறுவுவது தொடர்பாக அமைச்சரவை தீர்மானங்களின்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இக்குழுவினால் இது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதனால், இது தொடர்பான இறுதி முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை.
பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேராவுக்கு ஒரு இடத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அவர் இதனை ஒரு எளிமையான கட்டமைப்பு மாற்றம் என்று கூறுகிறார். இது எவ்வகையிலும் எளிமையானது அல்ல. ஏனெனில் 150 அல்லது 200 வருடங்களாக நிலவி வரும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் அதிகாரங்களை பிரிக்க வேண்டும்.
சட்ட மா அதிபரை வினைத்திறன்மிக்கதாக்குவது மற்றும் அரச தரப்பு அலுவலகத்தை நிறுவுவது ஆகிய இரண்டு விடயங்களையே நாமும் முயற்சிக்கிறோம். இதனை நாம் எமது கொள்கைப் பிரகடனத்தில், நாம் செய்ய வேண்டிய ஒரு விடயமாகக் குறிப்பிட்டிருந்தோம். அதனால்தான் நாம் ஆட்சிக்கு வந்த உடனேயே அதை நியமித்தோம்.
இப்போது வரை இக்குழுவின் பணிகள் நிறுத்தப்படவில்லை. நீதியரசர் யசந்த கோதாகொட தலைமையில் இக்குழுவின் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் நீதிச்சேவை ஆணைக்குழு ஆகியவற்றில் இருந்து ஆலோசனைகள் கோரப்பட்டுள்ளன. இது எவ்வகையிலும் எளிமையான காரியம் அல்ல. ஆனால் செய்ய வேண்டிய ஒரு விடயம், இதற்கு சில காலம் எடுக்கும். இதனைச் சரியான முறையில் செய்ய வேண்டும் என்பதனாலேயே தாமதம் ஏற்பட்டுள்ளது என்றார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM