புஸ்ஸல்லாவையில் மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் உயிரிழப்பு

Published By: Digital Desk 2

20 May, 2026 | 12:33 PM
image

கொத்மலை தவலந்தென்னையிலிருந்து கம்பளை நோக்கி அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிளொன்று மோதியதில், வீதியை கடக்க முயன்ற முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் புஸ்ஸல்லாவையில் பதிவாகியுள்ளது.

இந்த விபத்து திங்கட்கிழமை (18) புஸ்ஸல்லாவை நகர மத்திய பகுதியில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

72 வயதுடைய நபர் ஒருவர் கவனக்குறைவாக வீதியை கடக்க முயன்றபோது, நகரம் வழியாக பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் கடுமையாக காயமடைந்துள்ளார். பின்னர் புஸ்ஸல்லாவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் சாரதி கைது செய்யப்பட்டு கம்பளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து, சந்தேகநபரை இம்மாதம் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புஸ்ஸல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 3...

2026-06-08 17:39:48
news-image

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராகவும் பாடகர்...

2026-06-08 17:26:31
news-image

அரசாங்கம் கோப்புகளை மூடி மறைக்கிறது: புலனாய்வு...

2026-06-08 17:25:46
news-image

கலால் வரி ஆணையாளருக்கு எதிராக ராஜகிரியவில்...

2026-06-08 16:58:43
news-image

இலங்கையில் தடையை மீறி மின்-சிகரெட்டுகள் விற்கப்படுகிறது...

2026-06-08 17:03:05
news-image

25 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் பெண்...

2026-06-08 16:57:39
news-image

வல்வெட்டித்துறையில் கைது செய்யப்பட்ட சங்கீதனை விடுதலை...

2026-06-08 16:51:53
news-image

அநுராதபுரம் சிறுமி விவகாரம்: நீதிமன்ற உத்தரவுப்படி...

2026-06-08 16:46:04
news-image

சுவிஸ் தூதுவர் - ஆறு.திருமுருகன் இடையே...

2026-06-08 16:40:00
news-image

பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை பயன்படுத்தியதன் மூலம்...

2026-06-08 16:34:47
news-image

திறைசேரி ஹேக்கிங்கை விட சர்வதேச நாணய...

2026-06-08 16:21:02
news-image

மகள் மீது பாலியல் துஷ்பிரயோகம் ;...

2026-06-08 15:56:39