இலங்கையில் உள்ள 312.57 கிலோமீட்டர் நீளத்தைக் கொண்ட ஒட்டுமொத்த அதிவேக நெடுஞ்சாலைகளினதும் வருடாந்த பராமரிப்புச் செலவு 5,180.90 மில்லியன் ரூபாயாகும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (20) நடைபெற்ற பாராளுமன்ற அமர்வின்போது பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்க பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது பிமல் ரத்நாயக்க ஒவ்வொரு அதிவேக நெடுஞ்சாலைக்குமான பராமரிப்புச் செலவுகள் தொடர்பான விபரங்களை வெளியிட்டார்.
E1 தெற்கு அதிவேக நெடுஞ்சாலை (கொட்டாவ முதல் மத்தல வரை - 200.45 கி.மீ) : மொத்த செலவு 2,024.5 மில்லியன் ரூபாய்
E2 வெளிவட்ட அதிவேக நெடுஞ்சாலை (கொட்டாவ முதல் கெரவலப்பிட்டிய வரை - 28.86 கி.மீ) : மொத்த செலவு 767.6 மில்லியன் ரூபாய்
E3 கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை (பேலியகொட முதல் சீதுவை வரை - 25.8 கி.மீ) : மொத்த செலவு 834.1 மில்லியன் ரூபாய்
E4 மத்திய அதிவேக நெடுஞ்சாலை (மீரிகம முதல் குருநாகல், யக்கபிட்டிய வரை - 40.91 கி.மீ): மொத்த செலவு 531.00 மில்லியன் ரூபாய்
E5 தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நீடிப்பு (அந்தரவெவ முதல் அம்பாந்தோட்டை வரை - 16.55 கி.மீ): மொத்த செலவு 1,022.70 மில்லியன் ரூபாய்
இதன்படி, ஒட்டுமொத்தமாக 312.57 கிலோமீட்டர் அதிவேக நெடுஞ்சாலைப் பின்னலமைப்புக்குமான மொத்த பராமரிப்புச் செலவு 5,180.90 மில்லியன் ரூபாயாகும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 2025 டிசம்பர் 31ஆம் திகதி வரை அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளிலிருந்தும் பெறப்பட்ட மொத்த வருமானம் 16,330.14 மில்லியன் ரூபாயாகும் என்றும் அமைச்சர் சபையில் தெரிவித்தார்.
அதன்படி, ஒவ்வொரு அதிவேக நெடுஞ்சாலையிலிருந்தும் ஈட்டப்பட்ட வருமான விபரம் பின்வருமாறு:
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை : 5,031.28 மில்லியன் ரூபாய்
வெளிவட்ட அதிவேக நெடுஞ்சாலை : 4,347.32 மில்லியன் ரூபாய்
கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை: 3,355.12 மில்லியன் ரூபாய்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நீடிப்பு : 2,019.45 மில்லியன் ரூபாய்
மத்திய அதிவேக நெடுஞ்சாலை: 1,576.97 மில்லியன் ரூபாய்
இவ்வாறு நெடுஞ்சாலைகளின் ஊடாக பெற்ற வருமான விபரங்களை அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளியிட்டார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM