அமெரிக்க டொலரின் விற்பனை விலை 342 ரூபாயைக் கடந்தது

Published By: Digital Desk 3

20 May, 2026 | 11:51 AM
image

இலங்கை மத்திய வங்கி இன்று (20) வெளியிட்டுள்ள புதிய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 342 ரூபாயைக் கடந்து பாரிய உயர்வை உத்தியோகபூர்வமாகப் பதிவு செய்துள்ளது.

மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதங்களின்படி, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை (Buying Rate) 332.08 ரூபாயாகவும், அதன் விற்பனை விலை (Selling Rate) 342.70 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

ஒரே நாளில் ஏற்பட்ட பாரிய மாற்றம் நேற்று (19) செவ்வாய்க்கிழமை அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 328.23 ரூபாயாகவும், விற்பனை விலை 338.07 ரூபாயாகவும் காணப்பட்டது.

இதற்கமைய, நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில் ஒரே நாளில் டொலரின் மதிப்பு மிகக் கடுமையான உயர்வைச் சந்தித்துள்ளது.

இதேவேளை, நாட்டின் அரச வங்கி ஒன்றில் இன்றைய தினம்  அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ. 345.20 ஆகவும், கொள்வனவு விலையை ரூ. 335.65 ஆகவும்  அதிகரித்துக் காணப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கலால் வரி ஆணையாளருக்கு எதிராக ராஜகிரியவில்...

2026-06-08 16:58:43
news-image

இலங்கையில் தடையை மீறி மின்-சிகரெட்டுகள் விற்கப்படுகிறது...

2026-06-08 17:03:05
news-image

25 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் பெண்...

2026-06-08 16:57:39
news-image

வல்வெட்டித்துறையில் கைது செய்யப்பட்ட சங்கீதனை விடுதலை...

2026-06-08 16:51:53
news-image

அநுராதபுரம் சிறுமி விவகாரம்: நீதிமன்ற உத்தரவுப்படி...

2026-06-08 16:46:04
news-image

சுவிஸ் தூதுவர் - ஆறு.திருமுருகன் இடையே...

2026-06-08 16:40:00
news-image

பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை பயன்படுத்தியதன் மூலம்...

2026-06-08 16:34:47
news-image

திறைசேரி ஹேக்கிங்கை விட சர்வதேச நாணய...

2026-06-08 16:21:02
news-image

மகள் மீது பாலியல் துஷ்பிரயோகம் ;...

2026-06-08 15:56:39
news-image

அவுஸ்திரேலிய, நியூசிலாந்து பாராளுமன்றங்களில் அமைச்சர் விஜித...

2026-06-08 15:54:56
news-image

நானாட்டான் டிலாசால் கல்லூரி ஆசிரியரை இடமாற்ற...

2026-06-08 15:19:05
news-image

யாழ். சிறைச்சாலையில் சொல்லிசை பாடகர் சங்கீத்சனை...

2026-06-08 15:13:10