“வாழ்க்கையில் நான் இதுவரை யாரையும் கைநீட்டி அடித்ததில்லை. ஆனால் ‘பிளாஸ்ட்’ திரைப்படத்தில் வன்முறை நிறைந்த சண்டைக் காட்சிகளில் நடித்திருக்கிறேன்” என்று நடிகை அபிராமி தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிளாஸ்ட்’ திரைப்படத்தில் அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன், ஜான் கொக்கன், அர்ஜுன் சிதம்பரம், பவன், பாலா ஹாசன், வினோத் சாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். ஃபேமிலி வித் ஆக்ஷன் என்டர்டெய்னராக தயாராகியுள்ள இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. எதிர்வரும் 28ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் விளம்பர நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் படத்தின் கிரியேட்டிவ் புரொட்யூசர் அர்ச்சனா கல்பாத்தி பேசுகையில், “இந்த படம் பெண் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதைப் பற்றி பேசுகிறது. தற்போதைய சமூகத்தில் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்ற எண்ணம் நிலவுகிறது. அதனால் பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தற்காப்புக் கலைகளை கற்றுக்கொள்ள வேண்டும். தப்பான விஷயம் எங்கு நடந்தாலும் அதை தட்டி கேட்கும் தைரியம் பெண்களுக்கு இருக்க வேண்டும் என்பதையே படம் கூறுகிறது. ஒரு பெண்ணும் அவரது குடும்பமும் எதிர்கொள்ளும் சம்பவங்களே படத்தின் கதை” என்றார்.
நடிகை அபிராமி பேசுகையில், “நான் இதுவரை காமெடி, ஹாரர், ரொமான்டிக் உள்ளிட்ட பல வகை படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் முதன்முறையாக ஆக்ஷன் ஜானரில் இந்த படத்தில் நடித்திருக்கிறேன். வாழ்க்கையில் நான் இதுவரை யாரையும் கைநீட்டி அடித்ததில்லை. ஆனால் இப்படத்திலும் என்னால் நடிக்க முடியும் என்ற நம்பிக்கையை இந்த படம் எனக்குத் தந்துள்ளது. அனைவரும் திரையரங்குகளில் படம் பார்த்து ஆதரவு தர வேண்டும்” என்றார்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM