சாதனை படைத்து வரும் ராம்சரணின் 'பெத்தி' பட முன்னோட்டம்

Published By: Digital Desk 2

20 May, 2026 | 11:30 AM
image

பிரபல இந்திய நட்சத்திர நடிகரான மெகா பவர் ஸ்டார் ராம்சரண் கதையின் நாயகனாக - விளையாட்டு வீரராக - நடித்திருக்கும் 'பெத்தி' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இப்படத்தின் முன்னோட்டம் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் பல மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவாகியுள்ள 'பெத்தி' திரைப்படத்தில் ராம்சரண், சிவராஜ்குமார், ஜான்வி கபூர், ஜெகபதி பாபு, திவ்யேந்து சர்மா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசைப்புயல்' ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். விளையாட்டு வீரரின் வாழ்வியல் பின்னணியில் எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை விருத்தி சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட்டை சதீஷ் கிளாரு தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்குகிறது.

எதிர்வரும் ஜூன் மாதம் நான்காம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் இடம்பெற்றிருக்கும் காட்சிகளின் மூலம் கதையின் நாயகனான ராம்சரண் - துடுப்பாட்டம், மல்யுத்தம், தடகளம் ஆகிய விளையாட்டுகளில் சிறந்த வீரராக திகழ்கிறார் என்பதும், விளையாட்டு மூலமாகவே அவருடைய வாழ்வாதாரத்தை மேற்கொள்ள முயற்சிக்கிறார் என்பதும், இதில் ஏற்படும் தடைகளும் சங்கடங்களும் தான் படத்தின் மையப்புள்ளி என்பதும் தெரிய வருவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜூலையில் வெளியாகும் நடிகர் சந்தீப் கிஷன்...

2026-06-17 17:22:36
news-image

சாதனை படைத்து வரும் நடிகை ஐஸ்வர்யா...

2026-06-17 17:19:29
news-image

அதர்வா நடிக்கும் 'இதயம் முரளி '...

2026-06-17 17:16:26
news-image

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'சத்தியவான்...

2026-06-17 17:11:45
news-image

தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும்...

2026-06-17 13:39:16
news-image

திமுக தலைவர் மு க ஸ்டாலின்...

2026-06-16 17:50:32
news-image

நடிகர் பவிஷ் நாராயண் நடிக்கும் 'லவ்...

2026-06-16 17:47:33
news-image

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் 'டார்க்...

2026-06-16 17:43:20
news-image

டிஜிட்டல் தளத்திலும் சாதனை படைக்க வெளியாகும்...

2026-06-16 17:38:02
news-image

நடிகர் ரவி மரியா நடிக்கும் 'மக்கள்...

2026-06-15 14:57:24
news-image

விளையாட்டு அணியின் உரிமையாளரான வரலட்சுமி சரத்குமார்

2026-06-15 14:55:11
news-image

புனித தலமான காசி பின்னணியில் தயாரான...

2026-06-15 14:51:57