தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரும், இசையமைப்பாளருமான ஜீ.வி. பிரகாஷ் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'இம்மார்ட்டல்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவாகி வரும் 'இம்மார்ட்டல்' திரைப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் , கயாடு லோகர், 'ஆதித்யா' கதிர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார். கமர்ஷியல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏகே ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்குமார் தயாரித்திருக்கிறார்.
பல கட்டங்களாக நடைபெற்றுவந்த இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது என்றும், தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது என்றும், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் விரைவில் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஜீ.வி. பிரகாஷ் குமார் - கயாடு லோகர் கூட்டணி அமைத்திருப்பதால் இப்படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM