பத்தனை, குயின்ஸ்பரி தேயிலை தோட்டத்தில், தேயிலை பறித்துக் கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் 20 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்வர்களில் 13 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர் 7 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.