(எம்.எம்.மின்ஹாஜ்)

மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தலை மார்ச் மாதத்திற்குள் நடத்தவுள்ளோம். இதன்படி உள்ளூராட்சி மற்றும் மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தலை மார்ச் மாதத்திற்குள் நடத்தி முடிக்கவுள்ளோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அத்துடன் மூன்று மாகாண சபைகளுக்கான எல்லைநிர்ணய பணிகளை நான்கு மாதத்திற்குள் முடித்துக் கொள்ள முடியும். மேலும் முடியுமாயின் மூன்று மாகண சபைகளுடன் மேலும் மாகாண சபைகளையும் இணைத்து தேர்தலை நடத்தவும் வாய்ப்புகள் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை மாகாண சபை தேர்தல் திருத்தச்சட்டமூலத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.