முன்னணி ஆடை உற்பத்தியாளரான Omega Line பிரைவட் லிமிட்டெட், ஏற்றுமதி சார் கொள்கையை பின்பற்றி வருவதுடன், இத்தாலியை தளமாகக்கொண்டியங்கும் Calzedonia S.p.A வின் அங்கத்துவ நிறுவனமாக திகழ்கிறது.

இந்நிறுவனம் அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகளில், ஆடைத்துறையில், உயர் பெறுமதி சேர் ஏற்றுமதியாளருக்கான விருதை மீண்டும் தனதாக்கியிருந்தது.

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் (EDB)ஏற்பாடு செய்யப்பட்ட 21 ஆவது ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் வழங்கும் நிகழ்வின் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டார். 

இந்நிகழ்வு செப்டெம்பர் 14 ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. 

நாட்டின் ஏற்றுமதித்துறைக்கு பெருமளவு பங்களிப்பு வழங்கிய இந்நிகழ்வு, 2016 ஆம் ஆண்டில் நாட்டின் ஏற்றுமதித்துறைக்கு பெருமளவு பங்களிப்பை வழங்கியிருந்தது.

2015 ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வின் போதும், இது போன்று நிறுவனம் கௌரவிக்கப்பட்டிருந்தது.

“நாட்டின் ஆடைத்தொழிற்துறைக்கும் ஏற்றுமதித்துறைக்கும் தொடர்ச்சியாக வழங்கும் பங்களிப்புக்காக நாம் பெருமையடைகிறோம்” என Omega Line லிமிட்டெட் பணிப்பாளர் ஃபீலிக்ஸ் ஏ பெர்னான்டோ தெரிவித்தார்.

இத்தாலியின் Calzedonia S.p.A நிறுவனத்தின் மேற்பார்வையின் கீழ் ஒமெகா லைன் பிரைவட் லிமிட்டெட் இயங்குவதுடன், பெண்களுக்கான உள்ளாடைகள், காலுறைகள், இரவு ஆடைகள் மற்றும் நீச்சல் ஆடைகள் போன்றன அடங்கியுள்ளன.

ஏனைய உள்நாட்டில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் குழுமத்தின் துணை ஆடை உற்பத்தி நிறுவனங்களில்ரூபவ் படல்கமை – சிரியோ லிமிட்டெட், பொல்காவெல – அல்ஃபா அப்பரல்ஸ், பிங்கிரிய – பென்ஜி லிமிட்டெட் மற்றும் வவுனியா – வவுனியா அப்பரல்ஸ் ஆகியன அடங்கியுள்ளன. 

இவற்றில் மொத்தமாக 12000 க்கும் அதிகமான ஊழியர்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. Omega Line பிரைவட் லிமிட்டெட்ரூபவ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், நடவடிக்கைகளை முன்னெடுக்கும் சமூகப்பொறுப்புணர்வு வாய்ந்த நிறுவனமாகும். 

கடந்த ஆண்டு நிறுவனம் முன்னெடுத்திருந்த “சஹானோதயட்ட தவசக்” நிகழ்வில், பெருமளவு Omega Line ஊழியர்கள் முழு நாளையும் 40 சிறுவர் காப்பகங்கள் மற்றும் முதியோர் இல்லங்களில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் பெருமளவான ஊழியர்கள் பங்கேற்றிருந்தனர். இது முதலாவது நடவடிக்கை என்பதுடன், மேலும் பல நடவடிக்கைகள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ளன.

4200 க்கும் அதிகமான விற்பனை நிலையங்களை ஐரோப்பா, ரஷ்யா, மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் அமெரிக்கா ஆகிய பிராந்தியங்களின் 40 க்கும் அதிகமான நாடுகளில் கொண்டுள்ளது. 

Intimissimi,Calzedonia, Tezenis மற்றும் Falconeri ஆகிய வர்த்தக நாமங்களிலமைந்த தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன.

ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைமை அதிகாரியும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான இந்திரா மல்வத்தவின் தலைமைத்துவத்தின் கீழ், கொள்கை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வியாபார அமைச்சர் மலிக் சமரவிக்கரம மற்றும் சர்வதேச வியாபாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

21 ஆம் ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் நிகழ்வில் 60 பெருமைக்குரிய ஏற்றுமதி விருதுகள் வழங்கப்பட்டிருந்ததுடன், இதில் விசேட விருதுகளான உயர் வெளிநாட்டு நாணய வருமானமீட்டல்கள் மற்றும் சிறந்த பெறுமதிசார் ஏற்றுமதியாளர் துறைசார் விருதுகள் போன்றன வழங்கப்பட்டிருந்தன.