இன்றைய சூழலில் எம்மில் பலரும் வார இறுதி நாட்களில் நண்பர்களுடன் விருந்துகளில் பங்கு பற்றி சுவையான உணவுகளை அகால வேலையிலும் அதிகமாக பசியாறுகிறார்கள். இதன் காரணமாக அவர்களின் குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. அவர்களுக்கு வயிறு உப்புசம், ஆற்றல் குறைவு, மனச்சோர்வு, உடல் சோர்வு ஆகிய பாதிப்புகள் ஏற்படுவதாக வைத்திய நிபுணர்கள் விவரிக்கிறார்கள்.
எம்மில் சிலர் அலுவலகத்தில் சுறுசுறுப்பாகவும், விரைவாகவும் பணியாற்றுவதை அவதானித்திருப்போம் ஆனால் அவர்கள் தவறான உணவு முறைகளை பின்பற்றும் போது... நாளடைவில் அவர்களுடைய செயல்பாட்டின் மந்தநிலை ஏற்படுவதை காணலாம்.
அத்துடன் அவர்களது தோற்றத்திலும் மாற்றம் ஏற்பட்டிருக்கும். உதாரணமாக தொப்பை, மூளை மந்தம் எனப்படும் மந்த நிலை உருவாகி இருக்கும்.
அவர்கள் குறைவான ஆற்றலுடன் இயங்குவதையும் காணலாம். இதற்கு அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள் என பொதுவாக கூறுவர். ஆனால் இதன் பின்னணியில் அவர்களுடைய குடல் ஆரோக்கியமும் இணைந்து இருக்கிறது என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.
குடல் என்பது செரிமான செயல்பாட்டிற்காக இயங்கும் ஓர் உறுப்பு மட்டும் அல்ல. குடல் - நோய் எதிர்ப்பு ஆற்றல்- ஹோர்மோன் -மனநிலை - ஆற்றல் - ஆகியவற்றின் இயக்கத்திற்கும் பேருதவி புரிகிறது. உங்களுடைய உடலுக்குத் தேவையான எழுபது சதவீத நோய் எதிர்ப்பு சக்தி சக்தியை குடல் தான் வழங்குகிறது.
வயிறு உப்புசம், மலச்சிக்கல், பேதி , நெஞ்செரிச்சல் ஆகியவை உங்களுடைய குடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதன் அறிகுறிகள் ஆகும்.
இதனை தொடர்ந்தால் உங்களுடைய தோல், முடி, மனநிலை, கவன குவிப்பு ஆகியவற்றிலும் பாதிப்பை ஏற்படுத்தி.. உங்களுக்கு மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது. அதாவது முடி உதிர்வு முடியின் நிறம் மாற்றும் சீரான மனநிலை அல்லாமல் அடிக்கடி மூட் ஸ்விங்க்ஸ் எனப்படும் யாரிடமும் பேச விரும்பாத தனிமையை விரும்பும் பிரத்யேக உளவியல் சிக்கல் மற்றும் பணியில் ஒரு விதமான கவனம் செலுத்த இயலாத நிலை ஆகியவை ஏற்படும்.
துரித உணவுகள்- பதப்படுத்தப்பட்டு பக்கற்றுகளில் அடைக்கப்பட்டு விற்கப்படும் உணவுப் பொருள்கள்- மன உளைச்சல் -தூக்கமின்மை -ஆகியவை தான் உங்களுடைய குடலின் ஆரோக்கியத்தை மேலும் பலவீனப்படுத்துகிறது. இவை நாளாந்தம் தொடர்ந்தால் உங்களுடைய குடலின் இயக்கத்தில் பாரிய பாதிப்பு ஏற்பட்டு, மேலே விவரிக்கப்பட்ட குறைபாடுகளுக்கும் அதனால் ஏற்படும் நாளாந்த பாதிப்புகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியதிருக்கும்.
இத்தகைய தருணங்களில் வைத்தியர்களை சந்தித்து, அவர்களின் ஆலோசனையை கேட்க வேண்டும். அத்துடன் அவர்கள் பரிந்துரைக்கும் வாழ்க்கை நடைமுறை அதாவது ஊட்டச்சத்துள்ள உணவு- உடற்பயிற்சி- உறக்கம் -ஆகியவற்றில் ஒரு நிலையான வாழ்க்கை நடைமுறையை உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும். இதனை தொடர்ந்தால் உங்களது குடல் ஆரோக்கியம் மேம்பட்டு, வாழ்க்கை தரமும் அதிகரிக்கும். ஆயுளும் அதிகரிக்கும். உங்களுடைய இயக்கமும் அதிகரிக்கும்.
வைத்தியர் ஸ்ரீ தேவி
தொகுப்பு அனுஷா.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM