முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர் லலித் வீரதுங்கவுக்கும், தொலைத்­தொ­டர்பு கண்­கா­ணிப்பு ஆணைக்­கு­ழுவின் முன்னாள் பணிப்­பாளர் அனுஷ பெல்­பிட்ட ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

தொலை­த்தொ­டர்பு கண்­கா­ணிப்பு ஆணைக்­கு­ழு­விற்கு சொந்­த­மான 600 மில்­லியன் ரூபாவை ஜனா­தி­பதி செய­லக கணக்­கிற்கு பெற்று பெளத்த விகா­ரை­க­ளுக்கு சில் துணி வழங்­கி­ய­மைக்­காக முன்னாள் ஜனா­தி­பதி செய­லாளர் லலித் வீர­துங்க மற்றும் தொலைத்­தொ­டர்பு கண்­கா­ணிப்பு ஆணைக்­கு­ழுவின் முன்னாள் பணிப்­பாளர் அனுஷ பெல்­பிட்ட ஆகி­யோ­ருக்கு மூன்­றாண்டு சிறைத் தண்­ட­னையும் ஒரு­வ­ருக்கு தலா 2 மில்­லியன் ரூபா தண்­டமும் 50 மில்­லியன் ரூபா நஷ்­ட­ஈடும் வழங்க வேண்டும் என கூறி மேல் நீதி­மன்­றத்­தினால் தீர்ப்பு வழங்­கப்­பட்­டிருந்த நிலையிலேயே கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று இருவரையும் பிணையில் செல்ல உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.