மத்திய வங்கியின் பிணை முறி விநியோக மோசடி வழக்கின் விசாரணைகளுக்காக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் இன்று 2 ஆவது நாளாகவும்  ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜரானார்.

அர்ஜூன மகேந்திரனின் சாட்சியங்கள் அத்தியாவசியமானது என ஆணைக்குழு கடந்த 13 ஆம் திகதி தீர்மானித்ததையடுத்து அவர் நேற்றும் ஆணைக்குழுவில் ஆஜராகிய நிலையில் இன்றும் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.