இங்­கி­லாந்து கால்­பந்து அணியின் முன்னாள் தலை­வ­ரான  வெய்ன் ரூனி கடந்த முதலாம் திகதி அள­வுக்கு அதி­க­மாக மது அருந்­தி­விட்டு கார் ஓட்­டி­ய­தாக கைது செய்­யப்­பட்டு உட­ன­டி­யாக பிணையில் விடு­விக்­கப்­பட்டார். 

இந்த வழக்கு மான்­செஸ்­டரில் உள்ள ஸ்டாக்போர்ட் மஜிஸ்­தி­ரேட் நீதி­மன்றில் விசா­ர­ணைக்கு வந்­த ­போது நேரில் ஆஜ­ரான வெய்ன் ரூனி தனது தவறை ஒப்­புக்­கொண்டார். 

இதனை அடுத்து அவ­ருக்கு வாகனம் ஓட்ட 2 ஆண்­டுகள் தடை விதித்து நீதி­மன்றம் உத்­த­ர­விட்டது. அத்­துடன் அடுத்த 12 மாதங்­க­ளுக்குள் அவர் 100 மணிநேரம் சமூக சேவையில் ஈடு­பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.