"வட­மா­காண முதல்வர் விட­யத்தில் கருத்து முரண்­பா­டுகள் இருந்த போதிலும் அவர் வடக்கின் முதல்­வ­ராக இருப்­பதே எமக்கும் பல­மென்று நினை­கின்றேன்" என எதிர்க்­கட்சி தலைவர் சம்­பந்தன் நேற்று பின்­னி­ரவு இடம்­பெற்ற செய்தி ஆசி­ரி­யர்கள் சந்­திப்பின் போது தெரி­வித்தார்.  

அவர் மேலும் கூறு­கையில், 

"தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு எந்த சந்­தர்ப்­பத்­திலும் ஒற்­று­மை­யாக செயற்­பட வேண்டும் என்­பதே எமது நிலைப்­பா­டாகும், நான்கு கட்­சி­களும் இணைந்து செயற்­பட வேண்டும், இதில் ஒரு கட்சி மட்­டுமே எம்மை விமர்­சிக்­கின்­றது, நாம் யாரையும் விமர்­சிக்­க­வில்லை, முட்­டுக்­கட்­டை­யா­கவும் இல்லை, இன்று தமிழ் மக்­களின் விசு­வா­சத்தை பெற்­றுள்ள கட்­சி­யாக உள்ள நிலையில் அதனை  நாம் குழப்­பக்­கூ­டாது, சர்­வ­தேச தரப்பும் தொடர்ந்தும் இந்த கேள்­வியை எழுப்­பு­கின்­றது, இதன்போதும் நாம் ஒற்­று­மை­யாக உள்ளோம் என்றே கூறி வரு­கின்றோம், கருத்து முரண்­பா­டுகள் உள்­ளது உண்­மையே. 

ஆனால் இதுதான் ஜன­நா­ய­க­மாகும், அதை நாம் தடுக்­க­வில்லை, உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலில் கூட்­ட­மைப்பை உதா­சீ­னப்­ப­டுத்த விரும்­ப­வில்லை, கூட்­டா­கவே  செயற்­ப­டுவோம், எமது கட்­சிக்குள் உள்ள விமர்­ச­னங்­களை ஏற்­றுக்­கொண்டு அதனை தாங்­கிக்­கொண்டு செயற்­பட நாம் தயா­ராக உள்ளோம்"என தெரிவித்தார். 

கேள்வி:- வட­மா­கா­ண­சபை விட­யத்தில் நீங்கள் எடுத்த முடி­வுகள் சரி­யா­னதா? 

பதில்:- ஆம், அவர் விட­யத்தில் எமது தீர்­மா­னங்கள் சரி­யா­னது. பிரச்­சி­னைகள் இருக்­கலாம் ஆனால் அவரை நாம் தீர்­மா­னித்­தமை சரி­யா­னதே, அவ­ரைப்­போல ஒருவர் வட­மா­காண சபையில் முத­ல­மைச்­ச­ராக இருக்க வேண்­டி­யது அவ­சியம், தனிப்­பட்ட முறையில் அவ­ருக்கும் எமக்கும் இடையில் எந்த முரண்­பா­டு­களும் இல்லை, பொது­வான கருத்து முரண்­பா­டு­களே உள்­ளன, இன்னும் தொடர்ந்தும் அவர் முத­லமைச்­ச­ராக இருப்­பது எமக்கும் பல­மென்று நினை­கின்றேன்.

கேள்வி: அடுத்த தேர்­த­லிலும் அவரை முத­லமைச்­ச­ராக நிறுத்­து­வது கூட்­ட­மைப்பின் தீர்­மா­னமா? 

பதில்:- அவ்வாறு எந்த தீர்­மா­னமும் நாம் எடுக்­க­வில்லை. 

கேள்வி: இந்­தியா எமக்கு கொடுக்கும் அழுத்தம் குறை­வ­டைந்­துள்­ளதா?

பதில்:- இருக்­கலாம், அவர்கள் தனிப்­பட்ட ரீதியில் கால்­ப­திக்க முயற்­சித்து வரு­கின்­றனர், சீனா தனித்து இலங்­கைக்குள் செயற்­ப­டு­வது அவர்­க­ளுக்கு விருப்பம் இல்லை. ஆனால் இந்தியா அமக்கு தேவை என்ற அடிப்படையில் தொடர்ச்சியாக நாம் செயற்படுவோம் பழைய சம்பவங்களை அவர்கள் மறக்கவில்லை. ஆனால் கைவிட மாட்டார்கள் என நம்புகின்றோம்.