வனவாசல ரயில் விபத்து: 3,000 ரூபாவிற்கு விற்கப்பட்ட தண்டவாளப் பாகங்கள்; கொள்வனவு செய்த நபரும் கைது!

17 May, 2026 | 02:26 PM
image

களனி மற்றும் வனவாசல ரயில் நிலையங்களுக்கு இடையே இடம்பெற்ற ரயில் விபத்துத் தளத்திலிருந்து கழற்றப்பட்ட தண்டவாளப் பாகங்கள் 3,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை  கொள்வனவு செய்த  நபரின் அடையாளம் கண்டறியப்பட்டு அவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேல் மாகாண வடக்கிற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காலிங்க ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

வனவாசல பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்துத் தொடர்பில் தற்போதைய நிலைமைகளை விளக்குவதற்காக இன்று ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விபரங்களை வெளியிட்டார்.

விபத்து நடந்த இடத்தில் தண்டவாள ஆணிகளைக் கழற்றினார் என்ற சந்தேகத்தின் பேரில் நேற்று சனிக்கிழமை (16) கைது செய்யப்பட்ட 25 வயதுடைய இளைஞனிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போதே இந்தத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

குறித்த நபர் கடுமையான போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது.

இந்தச் சந்தேக நபர் வழங்கிய தகவலின் அடிப்படையில், திருடப்பட்ட அரச சொத்துக்களை வாங்கிய நபரை பொலிஸார் அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர். பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மட்டுமன்றி, இந்த விபத்தினால் ஏற்பட்ட ஏனைய நட்டங்கள் மற்றும் பாதிப்புகளுக்காகவும் இவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

தண்டவாளப் பாகங்களை கழற்றி விற்பதன் மூலம் கிடைக்கும் பண மதிப்பு மிகக் குறைவானது  என்ற போதிலும், அதனால் ஏற்படும் ஒட்டுமொத்த பொதுச் சொத்துச் சேதங்கள் மில்லியன் கணக்கிலானது என பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டினார்.

திருடப்பட்ட பொதுச் சொத்துக்கள் என்று தெரிந்தே அவற்றை வாங்குபவர்களுக்கு எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் வலியுறுத்தினார்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர் காலிங்க ஜயசிங்க தெரிவிக்கையில்,

திருடுவது மற்றும் திருட்டுப் பொருட்களை வைத்திருப்பது ஆகிய இரண்டுமே தண்டனைக்குரிய குற்றங்களாகும்.

இவ்வாறான பொருட்களை வாங்குபவர்களைக் கைது செய்து நாம் சட்ட நடவடிக்கை எடுப்போம். நீதிமன்ற முடிவைப் பொறுத்து அவர்கள் குற்றவாளிகளாகக் காணப்படலாம் அல்லது பிணையில் விடுவிக்கப்படலாம். அது சட்டபூர்வமான வழிமுறை.

எனினும், இந்த வழக்கில் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வோம். அத்துடன், இந்தச் சம்பவத்தால் ஏற்பட்ட சொத்துச் சேதங்கள் மற்றும் உயிருக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் நாங்கள் தனித்தனியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம் என மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குற்றச் செயல்களைப் பொலிஸ் திணைக்களத்தால் மாத்திரம்...

2026-06-14 16:06:17
news-image

எல்-நினோவால் நாட்டுக்குப் பாரிய பாதிப்புகள் ஏற்படும்...

2026-06-14 15:50:48
news-image

வலி.வடக்கில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு 36...

2026-06-14 16:03:29
news-image

பொலிஸ் விசேட சோதனை நடவடிக்கை குற்றச்செயல்களுடன்...

2026-06-14 16:00:39
news-image

முழு நாடுமே ஒன்றாக என்னும் நடவடிக்கைகமைய...

2026-06-14 16:00:10
news-image

பாரிய கடத்தல் முறியடிப்பு: சொகுசு மோட்டார்...

2026-06-14 14:54:12
news-image

செம்மணி மனிதப்புதைகுழியை பார்வையிடவுள்ள ஐரோப்பிய ஒன்றியப்...

2026-06-14 14:53:38
news-image

மாகாணசபைத் தேர்தல்; சாணக்கியன் எம்.பியின் தனிநபர்...

2026-06-14 14:48:35
news-image

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு...

2026-06-14 15:02:36
news-image

டெங்கு உட்பட வைரஸ் காய்ச்சல் பரவல்...

2026-06-14 14:31:24
news-image

தேசிய கல்விக் கொள்கையின்றி கல்வி மறுசீரமைப்புகளை...

2026-06-14 13:48:36
news-image

எனது கணவர் செம்மணி படுகொலையை வெளிப்படுத்திய...

2026-06-14 12:49:37