கொழும்பிலிருந்து பதுளை நோக்கி சென்ற பொடிமெனிக்கே ரயில் என்ஜீன் மீது மரம் ஒன்று விழுந்துள்ளது.

ஹட்டன் ரொசல்ல புகையிரத பாதையில் 105ம் மைல் கல் பகுதியில் இச்சம்பவம் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்தில் மர தரிப்பு வேலையில் ஈடுப்பட்டிருந்த நபர்கள் ரயில் வருவது தெரியாது மரங்களை தரித்துள்ளனர். 

அதேவேளை மரம் தரித்துக்கொண்டிருக்கும் போது ரயில் வருவதற்கும் மரம் விழுவதற்கும் சரியான சந்தர்ப்பமாக அமைந்துள்ளது. இதனால் ரயிலின் இயந்திர பகுதியில் மரம் வீழ்ந்து சிறு பாதிப்பு எற்பட்டுள்ளது. இதனால் 30 நிமிடங்கள் ரயில் சேவை ஸ்தம்பிதமடைந்துள்ளது.

பின்னர், மர தரிப்பாளர்களால் குறித்த மரம் அகற்றப்பட்டு ரயில் சேவை வழமைக்கு திரும்பியுள்ளது. ஆனால் பொடி மெனிக்கே ரயில் பாதுகாவலர்கள் மரம் தரித்த நபர்களில் குறித்த இருவரை ஹட்டன் புகையிரத நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிக்கு பொறுப்பளித்துள்ளனர். இதனையடுத்து ஹட்டன் புகையிரத கட்டுபாட்டு அதிகாரியான பி.கே.ஜீ துனுதிலக்க குறித்த சந்தேக நபர்கள் இருவரையும் ஹட்டன் பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைத்துள்ளார்.

ஹட்டன் பொலிஸ் நிலையம் மேற்படி இரு சந்தேக நபர்கள் இருவரையும் விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது. 

மேலும், மரம் தரிப்பு சட்ட ரீதியாகவே ஸ்டிரதன் தோட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்பது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(க.கிஷாந்தன்)