பாத யாத்­தி­ரையில் குழப்பம்

Published By: Priyatharshan

20 Sep, 2017 | 11:44 AM
image

முன்னாள் ஜனா­தி­பதியின் செய­லாளர் லலித் வீர­துங்க மற்றும் தொலைத் தொடர்­புகள் ஒழுங்­கு­ப­டுத்தும் ஆணைக்­கு­ழுவின் முன்னாள் பணிப்­பாளர் அனுஷ பெல்­பிட்ட ஆகி­யோருக்கு நீதி­மன்­றினால் விதிக்­கப்­பட்­டுள்ள நஷ்­ட­ஈடு மற்றும் தண்­டப்­பணம் என்­ப­வற்றைச் செலுத்­து­வ­தற்­காக பெளத்த தேரர்கள் நேற்று கிரி­பத்­கொ­டையில் நிதி திரட்­டும்­போது அங்கு குழப்ப நிலை ஏற்­பட்­டது. 

“சில் துணி சிறைக் கைதி­களைப் பாது­காக்கும் நிதியம்” எனும் அமைப்பு லலித் வீர­துங்க மற்றும் அனுஷ பெல்­பிட்ட ஆகி­யோருக்கு நீதி­மன்­றினால் விதிக்­கப்­பட்­டுள்ள நஷ்­ட­ஈடு மற்றும் தண்­டப்­பணம் என்­ப­வற்றைச் செலுத்­து­வ­தற்­காக கடந்த வெள்­ளிக்­கி­ழமை முதல் நாடு தழு­விய ரீதியில் நிதி திரட்டும் பாத யாத்­தி­ரை­யினை பெளத்த தேரர்கள் முன்­னெ­டுத்­துள்­ளனர்.  

அப்­பாத யாத்­தி­ரையின் நேற்­றைய பயணம் கிரி­பத்­கொட, ஹுனுப்­பிட்­டி­ய­வி­லுள்ள புதிய வீதியில் ஆரம்­ப­மா­னது. அதன்­போது, கூட்டு எதிர்க்­கட்­சியில் அங்­கம்­வ­கிக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான சிசிர ஜய­கொடி மற்றும் பிரசன்ன ரண­வீர ஆகி­யோருக்கு மகர நீதி­மன்­றத்­தினால் பிறப்­பிக்­கப்­பட்­டுள்ள தடை­யுத்­த­ரவை கிரி­பத்­கொட பொலிஸார் கைய­ளித்­துள்­ளனர்.  

எனினும் தேரர்கள் தமது பாத யாத்­தி­ரையைத் தொடர்ந்­து­கொண்­டி­ருந்­த­போது அங்கு சிலர் தேரர்கள் ஏந்­திக்­கொண்டு சென்ற பாத்­தி­ரத்­திற்குள் உண­வுப்­பொ­ருட்­க­ளையும் இட்­டனர். அதனைத் தொடர்ந்து தேரர்­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்கும் வகையில் தேரர்­க­ளுடன் சென்ற தரப்­பி­ன­ருக்கும் பாத்­தி­ரத்­திற்குள் உணவுப் பண்­டங்­க­ளை­யிட்ட தரப்­பி­னர்­க­ளுக்­கு­மி­டையில் முறுகல் நிலை ஏற்­பட்டு கை கலப்பு வரை சென்­றது.

எனவே அப்பிரதேசத்தில் சற்று பதற்றம் நிலவியதோடு வாகன நெரிசலும் ஏற்பட்டது. எனினும் பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து நிலைமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47