வனவாசல ரயில் விபத்து : பின்னணியில் திருட்டா? சதிவேலையா? - விசேட பொலிஸ் பிரிவு தீவிர விசாரணை!

16 May, 2026 | 05:45 PM
image

களனி மற்றும் வனவாசல  ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று  சனிக்கிழமை (16) அதிகாலை இடம்பெற்ற ரயில் விபத்தானது, இரும்புத் தகடுகள் திருடும் நோக்கில் கழற்றப்பட்டதா அல்லது இது ஒரு திட்டமிட்ட சதிவேலையா என்பது குறித்து விசேட பொலிஸ் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பிரதான பாதையிலிருந்து திடக்கழிவு முனையத்துக்குச் செல்லும் தண்டவாள இணைப்புப் பகுதியில்  இருந்த உலோகத் தகடுகள் அகற்றப்பட்டதே விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து போதைப்பொருளுக்கு அடிமையான ஒருவர் பேலியகொட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

தண்டவாள இணைப்பு தளர்வடைந்ததால், ரயிலின் முன்பெட்டி பிரதான மார்க்கத்திலும், பின்பெட்டிகள் கழிவு முனைய மார்க்கத்திலும் பயணித்துள்ளன. இதனால் இரண்டாவது பெட்டி இரு தடங்களுக்கும் குறுக்காகத் தடம்புரண்டு கவிழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் 12 பயணிகள் சிறு காயங்களுக்கு உள்ளாகி அருகில் உள்ள தனியார்  வைத்தியசாலையிலும்  ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இணைப்புப் பகுதி தளர்ந்ததால் ரயிலின் பெட்டிகள் வெவ்வேறு தண்டவாளங்களில் பயணித்து விபத்துக்குள்ளாகின. ஒரு கும்பல் நாசகார வேலைக்காகவோ அல்லது திருட்டுக்காகவோ  குறித்த உலோகத் தகடுகளை  அகற்றியுள்ளனர். இது குறித்து  பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக, ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் அசங்க சமரசிங்க  தெரிவித்தார்.

தற்போது விபத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபரை கைது செய்ய பேலியகொட பொலிஸார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கலால் வரி ஆணையாளருக்கு எதிராக ராஜகிரியவில்...

2026-06-08 16:58:43
news-image

இலங்கையில் தடையை மீறி மின்-சிகரெட்டுகள் விற்கப்படுகிறது...

2026-06-08 17:03:05
news-image

25 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் பெண்...

2026-06-08 16:57:39
news-image

வல்வெட்டித்துறையில் கைது செய்யப்பட்ட சங்கீதனை விடுதலை...

2026-06-08 16:51:53
news-image

அநுராதபுரம் சிறுமி விவகாரம்: நீதிமன்ற உத்தரவுப்படி...

2026-06-08 16:46:04
news-image

சுவிஸ் தூதுவர் - ஆறு.திருமுருகன் இடையே...

2026-06-08 16:40:00
news-image

பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை பயன்படுத்தியதன் மூலம்...

2026-06-08 16:34:47
news-image

திறைசேரி ஹேக்கிங்கை விட சர்வதேச நாணய...

2026-06-08 16:21:02
news-image

மகள் மீது பாலியல் துஷ்பிரயோகம் ;...

2026-06-08 15:56:39
news-image

அவுஸ்திரேலிய, நியூசிலாந்து பாராளுமன்றங்களில் அமைச்சர் விஜித...

2026-06-08 15:54:56
news-image

நானாட்டான் டிலாசால் கல்லூரி ஆசிரியரை இடமாற்ற...

2026-06-08 15:19:05
news-image

யாழ். சிறைச்சாலையில் சொல்லிசை பாடகர் சங்கீத்சனை...

2026-06-08 15:13:10