UPDATE ; வனவாசல ரயில் விபத்து : ரயில்வே திணைக்களத்தினர் பொலிஸில் முறைப்பாடு

16 May, 2026 | 04:13 PM
image

வனவாசல ரயில்  நிலையத்துக்கு அருகில் இன்று சனிக்கிழமை (16) அதிகாலை ரயிலொன்று தடம் புரண்டு கவிழ்ந்ததன் காரணமாக ஏற்பட்ட விபத்து தொடர்பாக ரயில்வே திணைக்களத்தினால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரயில்வே திணைக்களத்தின் பாதுகாப்புப் பிரிவு மற்றும் சமிக்ஞைப் பிரிவினரால் இன்று  பேலியகொட பொலிஸ் நிலையத்தில் இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, விபத்துக்குள்ளான ரயிலின் சாரதி மற்றும் கட்டுப்பாட்டாளரிடம் பொலிஸார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன், ரயில் விபத்து இடம்பெற்ற இடத்தில் ரயில் மார்க்கத்தின் ஆணிகள்  மற்றும் பாகங்களைக் கழற்றிய நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பொலிஸ் அதிகாரிகள் மற்றும் ரயில்வே திணைக்கள அதிகாரிகளினால் விபத்து இடம்பெற்ற இடத்தில் சோதனை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குற்றச் செயல்களைப் பொலிஸ் திணைக்களத்தால் மாத்திரம்...

2026-06-14 16:06:17
news-image

எல்-நினோவால் நாட்டுக்குப் பாரிய பாதிப்புகள் ஏற்படும்...

2026-06-14 15:50:48
news-image

வலி.வடக்கில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு 36...

2026-06-14 16:03:29
news-image

பொலிஸ் விசேட சோதனை நடவடிக்கை குற்றச்செயல்களுடன்...

2026-06-14 16:00:39
news-image

முழு நாடுமே ஒன்றாக என்னும் நடவடிக்கைகமைய...

2026-06-14 16:00:10
news-image

பாரிய கடத்தல் முறியடிப்பு: சொகுசு மோட்டார்...

2026-06-14 14:54:12
news-image

செம்மணி மனிதப்புதைகுழியை பார்வையிடவுள்ள ஐரோப்பிய ஒன்றியப்...

2026-06-14 14:53:38
news-image

மாகாணசபைத் தேர்தல்; சாணக்கியன் எம்.பியின் தனிநபர்...

2026-06-14 14:48:35
news-image

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு...

2026-06-14 15:02:36
news-image

டெங்கு உட்பட வைரஸ் காய்ச்சல் பரவல்...

2026-06-14 14:31:24
news-image

தேசிய கல்விக் கொள்கையின்றி கல்வி மறுசீரமைப்புகளை...

2026-06-14 13:48:36
news-image

எனது கணவர் செம்மணி படுகொலையை வெளிப்படுத்திய...

2026-06-14 12:49:37