எம்மில் சிலருக்கு குழந்தைகள் பிறக்கும் போதே அவர்களுடைய கை மற்றும் கை விரல்களில் இயல்புக்கு மீறிய அமைப்புகள் இருக்கும். உலக அளவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு இத்தகைய பாதிப்பு ஏற்படுவதாகவும், இதில் பெண் பிள்ளைகளை விட ஆண் பிள்ளைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாகவும் அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.
இத்தகைய குறைபாடுகளை மருத்துவ மொழியில் பிறவி கை மற்றும் கை விரல் குறைபாடு என குறிப்பிடப்படுகிறது. இதற்கு தற்போது மீட்டுருவாக்கம் எனும் நவீன மருத்துவ தொழில்நுட்பங்களுடன் கூடிய சத்திர சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணம் அளிக்கப்படுகிறது என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
பிறக்கும் போது ஒவ்வொரு பிள்ளைகளின் இரண்டு கைகளின் விரல்களும் இயல்பாக அமைந்திருக்க வேண்டும். பலருக்கு இதில் ஐந்துக்கும் மேற்பட்ட விரல்களோ அல்லது குறைவான விரல்களோ அல்லது விரல்களில் இயக்கம் முழுமையாக இல்லாமலோ பிறக்க கூடும். இதனை மருத்துவ மொழியில் பொலிடாக்டைலி, சின்டாக்டைலி, சிம்ப்ராக்கிடாக்டைலி, கிளப் ஹேண்ட், ரேடியல் கிளப் ஹேண்ட், அல்னார் கிளப் ஹேண்ட்.. என பல்வேறு வகையினதாக வரையறை செய்து அதற்குரிய சிகிச்சைகளை வழங்குகிறார்கள்.
இதில் சிலருக்கு ஐந்து விரல்கள் இருந்தாலும் அவர்களில் வெகு சிலருக்கு வலது மற்றும் இடது கை கட்டை விரலில் போதுமான இயக்கமோ அல்லது செயல்பாடோ இருப்பதில்லை. இத்தகைய பாதிப்பிற்கு வைத்திய நிபுணர்கள் மைக்ரோ வாஸ்குலர் ரீகன்ஸ்ட்ரக்ஷன் எனும் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய சத்திர சிகிச்சையை மேற்கொண்டு பிள்ளைகளின் கை விரல்களை ஏனைய குழந்தைகளின் கை விரல்களைப் போல் மீட்டுருவாக்கம் செய்து முழுமையான நிவாரணத்தை அளிப்பர். இதனைத் தொடர்ந்து அப்பிள்ளைகளுக்கு பிரத்யேக இயன்முறை சிகிச்சை மூலம் சத்திர சிகிச்சை செய்யப்பட்ட விரல்களின் இயக்கத்தை சீரமைப்பர்.
வைத்தியர் சிவக்குமார்
தொகுப்பு : அனுஷா.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM