பிரிந்த உறவுகள் மீண்டும் ஒன்றிணைவதற்கான பிரத்யேக வழிமுறை

Published By: Digital Desk 2

16 May, 2026 | 07:36 PM
image

இன்றைய சூழலில்எம்முடைய இளைய தலைமுறையினர் பொறுமையில்லாத தலைமுறையினராகவும்..வேகமாகவும், விரைவாகவும் தங்களுடைய எண்ணங்களை வெளிப்படுத்துபவர்களாகவும்... மற்றவர்களின் மனதைதங்களுடைய செயல்பாடுகளும், பேச்சுகளும் காயப்படுத்துமா? படுத்தாதா? என்பதை குறித்து சிந்திக்காமல்.. தடித்த சொற்களை சூழலுக்கு பொருந்தாத வகையில் பாவிக்கிறார்கள்.

இதனால் நட்புகளோ உறவுகளோ அல்லதுபுரிதலுடன் பயணிப்பவர்களோ உங்களிடமிருந்து உடனடியாக விலகிவிடுவார்கள் அல்லது விலகத் தொடங்கிவிடுவார்கள்.

 அதன் பிறகு பிரிவு உங்களை சுட தொடங்கும் போதுதான் உங்களுடைய பேச்சுக்களை பற்றி சுயஆய்வையோ அல்லது சுய பரிசோதனையோ செய்து கொள்ள முற்படுவீர்கள். ஆனால் அதற்குள் காலம் கடந்துவிடும். விரிசல் மேலும் விசாலமாக விரிவடைந்து பிரிவை நோக்கி பயணிக்க தொடங்கி விடும்.

 இந்தத் தருணத்தில் நீங்கள் உங்களை சுய ஆய்வு செய்து மன்னிப்பை கோர விரும்பினாலும்.. அதற்கு சூழல் இடம் தராது. குறிப்பாககாதலர்களுக்கு இடையே ஏற்படும் கருத்து முரண்பாடுகளுக்கு மூல காரணத்தை ஆராய்ந்தால்.அவை மதிப்புமிக்கதாக இருப்பதில்லை. ஆனால் பிரிவு உங்களை மனதளவில் பாதித்து... சோர்வையும், உளவியல் சிக்கலையும்உண்டாக்கிவிடும்.

 இத்தகைய தருணங்களில் நீங்கள் உங்களுடன் தொடர்பில் இருந்த அந்நியரின் உறவைபுதுப்பித்துக் கொள்ள விரும்பினாலோ அல்லது அவர்களிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்க விரும்பினாலோஅல்லது அவர்களை சந்திக்க முயற்சி செய்தாலோ.. அதனால் எந்த பலனும் கிடைக்காது என்று நீங்கள்தீர்மானிக்கும் முன் ஒரு முறை எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் பரிந்துரைத்த பிரத்யேக வழிமுறையைகடைப்பிடியுங்கள். 

அதன் பிறகு குறுகிய கால அவகாசத்திற்குள் உங்களுடைய விருப்பத்திற்குரியவர்கள்அனைத்தையும் மறந்து மீண்டும் உங்களுடன் பேச்சு வார்த்தை நடத்த முன் வருவார்கள்.

இதற்கு தேவையான பொருட்கள் : முழுமையான பழுதில்லாத பிரியாணி இலை - சிவப்பு வண்ணத்திலான ஸ்கெட்ச்பேனா - மெழுகுவர்த்தி அல்லது அகல் விளக்கு - ஒரு கோப்பை நீர்.ஒரு செவ்வாய்க்கிழமையை தேர்வு செய்து காலை அல்லது மாலை எது உங்களுக்கு சௌகரியமான தருணங்களோஅவற்றை தேர்வு செய்து கொள்ளுங்கள். ஓரிடத்தில் அமருங்கள். அங்கு மேலே குறிப்பிடப்பட்ட பொருட்களைவைத்துக் கொள்ளுங்கள். 

முதலில் ஒரு கோப்பை நீரின் மீது கை வைத்துக் கொண்டு நான் அறிந்தும் அறியாமலும்தவறு செய்திருந்தால் மன்னித்துவிடு.. என் மன்னிப்பை ஏற்றுக் கொள்.. என்று மனதார பிரார்த்தித்து அந்த கோப்பைநீரை அருந்துங்கள்.

அதனைத் தொடர்ந்து உங்களிடம் உள்ள பிரியாணி இலையில் நீங்கள் பேச விரும்பும் நபர் அல்லது உறவை புதுப்பித்துக்கொள்ள விரும்பும் நபர் அல்லது நட்பு பாராட்ட விரும்பும் நபரின் பெயரை பிரியாணி இலை மீது சிவப்பு வண்ணஸ்கெட்ச் பேனாவால் எழுதுங்கள். அதனுடன் 3314742 என்ற எண்களை வரிசை மாறாமல் எழுதுங்கள். அதன் பிறகுஅந்த பிரியாணி இலையை உங்களது இடது கை உள்ளங்கையில் வைத்து அதன் மீது வலது கையை வைத்துக்கொள்ளுங்கள் நான் என்னுடைய தவறுகளை உணர்ந்து திருத்திக் கொண்டேன். 

அவர் என்னுடன் பேச்சுவார்த்தையை நடத்தி மீண்டும் உறவை பழைய இயல்பான நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும் என்ற உங்களதுவிருப்பத்தை தெரிவித்து விட்டு, அந்த பிரியாணி இலையை நீங்கள் உங்களுக்கு அருகே உள்ள மெழுகுவர்த்திஅல்லது அகல் விளக்கில் எரித்து விடுங்கள். அதன் பிறகு அந்த சாம்பலை வீட்டுக்கு வெளியே அல்லது மொட்டை

மாடிக்கு எடுத்துச் சென்று வானத்தை நோக்கி ஊதி விடுங்கள். இதனை நீங்கள் தொடர்ந்துபதினொரு நாட்கள்மேற்கொண்டு வந்தால்... உங்களிடமிருந்து நட்பையோ... காதலையோ... உறவையோ... துண்டித்து பிரிவினைஏற்படுத்திக் கொண்ட நபர்கள்.. மீண்டும் உங்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி உங்களை மகிழ்விப்பார்கள்.

இதனை செவ்வாய்க்கிழமைகளில் மேற்கொண்டால் நல்ல பலன் விரைவாகக் கிடைக்கும். சிலரால்செவ்வாய்க்கிழமைகளில் மேற்கொள்ள முடியாத நிலை இருந்தால்.. வெள்ளி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில்இதனை மேற்கொள்ளலாம்.

தொகுப்பு : சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தொடர் தோல்வியை மாற்றியமைப்பதற்கான எளிய வழிமுறை!

2026-06-16 17:04:51
news-image

கண் திருஷ்டியை நீக்குவதற்கான எளிய வழிமுறை..!?

2026-06-15 17:12:49
news-image

புத்திர பாக்கியம் கிடைப்பதற்கான பிரத்யேக வழிமுறை..!

2026-06-12 14:13:00
news-image

தடைகளை அகற்றும் எளிய வழிமுறை..!?

2026-06-11 17:16:42
news-image

பரிவர்த்தனை யோகம் எப்போது செயல்படும்..?

2026-06-10 16:42:14
news-image

பண வரவை அதிகரித்துக் கொள்வதற்கான பிரத்யேக...

2026-06-09 18:14:07
news-image

சொத்து தொடர்பான பிரச்சனைகள் நீங்குவதற்கான பிரத்யேக...

2026-06-08 17:05:52
news-image

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்..!

2026-06-05 16:03:16
news-image

குலதெய்வத்தின் அருளை பெறுவதற்கான பிரத்யேக குறிப்பு..!

2026-06-04 16:58:05
news-image

மனதின் அச்சம் நீங்குவதற்கான பிரத்யேக வழிமுறை..!

2026-06-03 15:14:02
news-image

வாழ்க்கையில் எப்போதும் அவசியமாகும் எண்கள்..?

2026-06-02 17:58:16
news-image

தன வரவை நாளாந்தம் அதிகரித்துக் கொள்வதற்கான...

2026-06-01 14:30:17