ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சென்னை கிளையின் தவறால் 8 கோடி ரூபா அபுதாபி வங்கிக்கு மாற்றம் : தயாசிறி ஜயசேகர

16 May, 2026 | 01:42 PM
image

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் சென்னை கிளையினால் மேற்கொள்ளப்பட்ட நிதிப் பரிமாற்றத்தின்போது, 8 கோடி ரூபாவுக்கும் அதிகளவிலான பணம் தவறான வங்கிக் கணக்கொன்றில் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

துபாயில் உள்ள முகவர் நிறுவனம் ஒன்றுக்கு செலுத்தவேண்டிய மாதாந்த கொடுப்பனவே இவ்வாறு தவறுதலாக வேறொரு வங்கிக்கணக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.

செலுத்தப்படவேண்டிய வங்கி: எமிரேட்ஸ் என்.பி.டி  வங்கிக் கணக்கு.

தவறுதலாக செலுத்தப்பட்ட வங்கி: அபுதாபி இஸ்லாமிய வங்கிக் கணக்கு.

இவ்வாறு தவறான கணக்குக்கு அனுப்பப்பட்டுள்ள தொகை 974,500 டிராம் ஆகும். இது இலங்கை நாணய மதிப்பில் 8 கோடி ரூபாவுக்கும் (80 மில்லியன்) அதிகமான தொகையாகும்.

வேறொரு வங்கிக் கணக்குக்குச் சென்ற இந்தப் பணத்தை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியாமல் போயுள்ளதன் காரணமாக, தற்போது பெரியதொரு நெருக்கடி நிலை உருவாகியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, அரசாங்கம் இதில் உடனடியாக தலையிட்டு இந்தத் தகவல்களின் உண்மைத்தன்மையை கண்டறியவேண்டும் என தயாசிறி ஜயசேகர மேலும் வலியுறுத்தியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குற்றச் செயல்களைப் பொலிஸ் திணைக்களத்தால் மாத்திரம்...

2026-06-14 16:06:17
news-image

எல்-நினோவால் நாட்டுக்குப் பாரிய பாதிப்புகள் ஏற்படும்...

2026-06-14 15:50:48
news-image

வலி.வடக்கில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு 36...

2026-06-14 16:03:29
news-image

பொலிஸ் விசேட சோதனை நடவடிக்கை குற்றச்செயல்களுடன்...

2026-06-14 16:00:39
news-image

முழு நாடுமே ஒன்றாக என்னும் நடவடிக்கைகமைய...

2026-06-14 16:00:10
news-image

பாரிய கடத்தல் முறியடிப்பு: சொகுசு மோட்டார்...

2026-06-14 14:54:12
news-image

செம்மணி மனிதப்புதைகுழியை பார்வையிடவுள்ள ஐரோப்பிய ஒன்றியப்...

2026-06-14 14:53:38
news-image

மாகாணசபைத் தேர்தல்; சாணக்கியன் எம்.பியின் தனிநபர்...

2026-06-14 14:48:35
news-image

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு...

2026-06-14 15:02:36
news-image

டெங்கு உட்பட வைரஸ் காய்ச்சல் பரவல்...

2026-06-14 14:31:24
news-image

தேசிய கல்விக் கொள்கையின்றி கல்வி மறுசீரமைப்புகளை...

2026-06-14 13:48:36
news-image

எனது கணவர் செம்மணி படுகொலையை வெளிப்படுத்திய...

2026-06-14 12:49:37