ரயில் விபத்து : தண்டவாள ஆணிகளை கழற்றிய குற்றச்சாட்டில் போதைக்கு அடிமையானவர் கைது!

16 May, 2026 | 12:46 PM
image

வனவாசல மற்றும் ஹுனுபிட்டிய ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று சனிக்கிழமை (16) காலை ரயில் விபத்து இடம்பெற்ற இடத்தில், ரயில் தண்டவாளத்தின் ஆணிகளைக்  கழற்றிய குற்றச்சாட்டில் சந்தேகத்தின் அடிப்படையில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேலியகொடை பொலிஸாரினால் இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்  என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ரயில் தண்டவாளத்திலிருந்து அகற்றப்பட்ட ஆணியை ஒரு குறிப்பிட்ட இடத்துக்குக் கொண்டு சென்றவர் இந்த சந்தேக நபர்தான் என்பது தெரியவந்துள்ளது.

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக மற்றொரு சந்தேக நபரைக் கைது செய்வதற்கான விசாரணையை பொலிஸார் தொடங்கியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாரிய கடத்தல் முறியடிப்பு: சொகுசு மோட்டார்...

2026-06-14 14:54:12
news-image

செம்மணி மனிதப்புதைகுழியை பார்வையிடவுள்ள ஐரோப்பிய ஒன்றியப்...

2026-06-14 14:53:38
news-image

மாகாணசபைத் தேர்தல்; சாணக்கியன் எம்.பியின் தனிநபர்...

2026-06-14 14:48:35
news-image

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு...

2026-06-14 15:02:36
news-image

டெங்கு உட்பட வைரஸ் காய்ச்சல் பரவல்...

2026-06-14 14:31:24
news-image

தேசிய கல்விக் கொள்கையின்றி கல்வி மறுசீரமைப்புகளை...

2026-06-14 13:48:36
news-image

எனது கணவர் செம்மணி படுகொலையை வெளிப்படுத்திய...

2026-06-14 12:49:37
news-image

சிறுபான்மை கட்சிகள் கூட்டிணைந்து ஜனாதிபதி அநுரவை...

2026-06-14 12:48:47
news-image

சலே எட்டு நாட்களாக ஒரு துளி...

2026-06-14 12:48:14
news-image

கண்டி - குருநாகல் வீதியில் விபத்து:...

2026-06-14 12:47:40
news-image

2.5 மில்லியன் டொலர் மோசடி பாராளுமன்றுக்கு...

2026-06-14 13:56:41
news-image

தமிழ்ச்சமூகத்தின் மாபெரும் ஆளுமை கலாநிதி தேவநேசன்...

2026-06-14 12:34:42