பாரம்பரிய நாகரிகத்துடன் அபிவிருத்தி இணையும்போது மட்டுமே மனித குலம் உன்னத வெற்றியடையும்! : ஹொங்கொங்கில் நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு

16 May, 2026 | 12:36 PM
image

அபிவிருத்தியானது பாரம்பரிய நாகரிகத்துடன் இணைந்து செயற்படும்போது மட்டுமே மனித குலம் உன்னதமான வெற்றிகளைப் பெற முடியும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஹொங்கொங்கில் நடைபெற்ற '2026 ஆசிய கலாசார பொது நலன்புரி மன்றத்தில்' கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், 

2030ஆம் ஆண்டாகும்போது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி  வளர்ச்சியில் ஆசிய கண்டம் சுமார் 60 சதவீத பங்களிப்பு செய்யும்.

இந்த நிலையில், இந்த எழுச்சியின்போது நமது கலாசார அடையாளங்களையும் நவீன தொழில்நுட்பத்தையும் எவ்வாறு சமநிலைப்படுத்தப் போகிறோம் என்ற கேள்வி எழுகிறது.

25 நூற்றாண்டு கால வரலாற்றைக் கொண்ட இலங்கையின் குளம், கிராமம், தாதுகோபம் மற்றும் விகாரை ஆகிய நான்கும் ஒன்றோடொன்று இணைந்த உன்னத வாழ்வியல் கட்டமைப்பாகும். எமது முன்னோர்கள் இவற்றைத் தங்களின் புகழுக்காகக் கட்டவில்லை. நிலைத்தன்மை மற்றும் பொதுமக்களின் நலனுக்காகவே உருவாக்கினர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ துறைமுகங்கள், அதிவேக நெடுஞ்சாலைகளை உருவாக்கி நாட்டின் பொருளாதாரத்தை நவீனமயமாக்கிய அதேவேளை, கிராமப்புற வலுவூட்டல் மற்றும் சமூக நலன்புரித் திட்டங்கள் மூலம் நாட்டின் தனித்துவத்தைப் பாதுகாத்தார்.

செயற்கை நுண்ணறிவு, தொலைதூர மருத்துவம் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் அவசியமானவை. ஆனால், ஒழுக்கநெறி இல்லாத தொழில்நுட்பம் சமூகப் பிரிவினையையே ஏற்படுத்தும்.

ஆசியாவின் இளம் தலைமைத்துவம் வெறும் தேர்தல்களைப் பற்றி மட்டும் சிந்திக்காமல், வரவிருக்கும் தலைமுறைகளைப் பற்றியும் சிந்திக்கவேண்டும். ஆசியா, பொருளாதாரத் தலைமைத்துவத்தை விட நெறிமுறை மற்றும் கலாசாரத் தலைமைத்துவத்துக்குத் தயாராக வேண்டும்.

ஒரு நாகரிகத்தின் வலிமை அதன் இராணுவ பலத்தால் அளவிடப்படுவதில்லை. மாறாக அதன் மக்களின் வாழ்க்கைத் தரத்தினாலுமே அளவிடப்படுகிறது என நாமல் ராஜபக்ஷ தனது உரையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எல்-நினோவால் நாட்டுக்குப் பாரிய பாதிப்புகள் ஏற்படும்...

2026-06-14 15:50:48
news-image

வலி.வடக்கில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு 36...

2026-06-14 16:03:29
news-image

பொலிஸ் விசேட சோதனை நடவடிக்கை குற்றச்செயல்களுடன்...

2026-06-14 16:00:39
news-image

முழு நாடுமே ஒன்றாக என்னும் நடவடிக்கைகமைய...

2026-06-14 16:00:10
news-image

பாரிய கடத்தல் முறியடிப்பு: சொகுசு மோட்டார்...

2026-06-14 14:54:12
news-image

செம்மணி மனிதப்புதைகுழியை பார்வையிடவுள்ள ஐரோப்பிய ஒன்றியப்...

2026-06-14 14:53:38
news-image

மாகாணசபைத் தேர்தல்; சாணக்கியன் எம்.பியின் தனிநபர்...

2026-06-14 14:48:35
news-image

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு...

2026-06-14 15:02:36
news-image

டெங்கு உட்பட வைரஸ் காய்ச்சல் பரவல்...

2026-06-14 14:31:24
news-image

தேசிய கல்விக் கொள்கையின்றி கல்வி மறுசீரமைப்புகளை...

2026-06-14 13:48:36
news-image

எனது கணவர் செம்மணி படுகொலையை வெளிப்படுத்திய...

2026-06-14 12:49:37
news-image

சிறுபான்மை கட்சிகள் கூட்டிணைந்து ஜனாதிபதி அநுரவை...

2026-06-14 12:48:47