வாகன இறக்குமதிக்கு 50 சதவீத கூடுதல் வரி : ஜனாதிபதியின் அதிரடி வர்த்தமானி வெளியீடு!

Published By: Digital Desk 1

16 May, 2026 | 07:20 PM
image

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான சுங்க இறக்குமதி வரியின் மீது 50 சதவீதம் கூடுதல் வரியை விதிப்பதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடன் இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய திருத்தங்களின்படி, இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு இதுவரை காலமும் விதிக்கப்பட்டிருந்த 30 சதவீத சுங்க இறக்குமதி வரியின் மீது, மேலும் 50 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படவுள்ளது. 

இந்த புதிய வரி விதிப்பு இன்று சனிக்கிழமை (16) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அடுத்த 3 மாத காலத்திற்கு அமுலில் இருக்கும் என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், நேற்று வெள்ளிக்கிழமை (15) அல்லது அதற்கு முன்னர் நாணய கடிதங்கள் திறக்கப்பட்டு முன்பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களுக்கு இந்த புதிய 50 சதவீத கூடுதல் சுங்க வரி விவகாரம் பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகள் மற்றும் வெளிநாட்டு கையிருப்பை கருத்திற்கொண்டே இந்த தற்காலிக வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலதிக விபரங்கள் 

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட வகை மோட்டார் வாகனங்களுக்கான சுங்க இறக்குமதி வரியின் (Customs Import Duty) மீது தற்காலிகமாக 50 சதவீதம் மேலதிகக் கட்டணத்தை (Surcharge) விதிப்பதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ள 2026.05.15 திகதியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, இப்புதிய வரி விதிப்பு முறை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ளதுடன், அடுத்த மூன்று மாத காலத்திற்கு இது அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1988 ஆம் ஆண்டின் 83 ஆம் இலக்கச் சட்டத்தினால் திருத்தப்பட்ட சுங்கக் கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 235) 10 ஏ பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த 50 சதவீத மேலதிகக் கட்டணமானது பொதுவான மற்றும் முன்னுரிமை இறக்குமதி வரி அடிப்படைகள் இரண்டிற்குமே பொருந்தும் என நிதி அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

அதற்கமைய பத்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களை ஏற்றிச் செல்லக்கூடிய பொதுப் போக்குவரத்து வாகனங்கள், மோட்டார் கார்கள், ஸ்டேஷன் வேகன்கள், பந்தய கார்கள், ஆம்புலன்ஸ்கள், சிறைச்சாலை வண்டிகள், பிரேத வாகனங்கள், நடமாடும் வீடுகள் மற்றும் கோல்ஃப் கார்கள் உள்ளிட்ட பரந்த அளவிலான வாகனங்களுக்கு இந்த மேலதிகக் கட்டணம் விதிக்கப்படவுள்ளது.

இந்த ஒழுங்குமுறையானது சிலிண்டர் திறன், எஞ்சின் உந்துவிசை வகை மற்றும் வாகனத்தின் பழமை ஆகியவற்றின் அடிப்படையிலான தொழில்நுட்ப வகைப்பாடுகளின் கீழ் வரும் அனைத்து வாகனங்களுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த புதிய வரி விதிப்பினால் வாகன இறக்குமதியாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் வகையில் சலுகையொன்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த அட்டவணையில் விவரிக்கப்பட்டுள்ள மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக 2026 மே 15 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ திறக்கப்பட்ட கடன் கடிதங்களுக்கு (Letters of Credit - L/C) இந்த புதிய 50 சதவீத மேலதிக வரி உத்தரவு பொருந்தாது என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குற்றச் செயல்களைப் பொலிஸ் திணைக்களத்தால் மாத்திரம்...

2026-06-14 16:06:17
news-image

எல்-நினோவால் நாட்டுக்குப் பாரிய பாதிப்புகள் ஏற்படும்...

2026-06-14 15:50:48
news-image

வலி.வடக்கில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு 36...

2026-06-14 16:03:29
news-image

பொலிஸ் விசேட சோதனை நடவடிக்கை குற்றச்செயல்களுடன்...

2026-06-14 16:00:39
news-image

முழு நாடுமே ஒன்றாக என்னும் நடவடிக்கைகமைய...

2026-06-14 16:00:10
news-image

பாரிய கடத்தல் முறியடிப்பு: சொகுசு மோட்டார்...

2026-06-14 14:54:12
news-image

செம்மணி மனிதப்புதைகுழியை பார்வையிடவுள்ள ஐரோப்பிய ஒன்றியப்...

2026-06-14 14:53:38
news-image

மாகாணசபைத் தேர்தல்; சாணக்கியன் எம்.பியின் தனிநபர்...

2026-06-14 14:48:35
news-image

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு...

2026-06-14 15:02:36
news-image

டெங்கு உட்பட வைரஸ் காய்ச்சல் பரவல்...

2026-06-14 14:31:24
news-image

தேசிய கல்விக் கொள்கையின்றி கல்வி மறுசீரமைப்புகளை...

2026-06-14 13:48:36
news-image

எனது கணவர் செம்மணி படுகொலையை வெளிப்படுத்திய...

2026-06-14 12:49:37